இந்தியாவில் அதிகமாக விற்கும் பைக்…2020 ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் – பி.எஸ்.6 மாடல் வெளியீடு

 

இந்தியாவில் அதிகமாக விற்கும் பைக்…2020 ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் –  பி.எஸ்.6 மாடல் வெளியீடு

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் பைக்கின் பி.எஸ்.6 மாடல் வெளியிடப்பட்டுள்ளது.

டெல்லி: ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் பைக்கின்  பி.எஸ்.6 மாடல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் பி.எஸ்.6 எஞ்சின்கள் கொண்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமே வருகிற ஏப்ரல்.1-ஆம் தேதி முதல் விற்கப்படும். அதனால் அனைத்து நிறுவனங்களும் தங்களது வாகனங்களின் பி.எஸ்.6 மாடலை தயாரித்து வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் 97.2சிசி என்ஜின் கொண்ட ஹீரோ ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் பைக்கின் பி.எஸ்.6 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கின் டிசைனில் பெரிதளவில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. ஆனால் புதிய கிராஃபிக்ஸ் மற்றும் எக்ஸாஸ்ட் பைப் இடம்பெற்றுள்ளது. மற்றபடி வசதிகளில் எந்த மாறுதலும் இல்லை. அதேசமயம் பைக்கின் அளவுகளில் வித்தியாசம் தெரிகிறது.

ttn

முன்பைப் போலவே 3 வேரியன்ட்களில் சில்வர்/கறுப்பு கலர் காம்போ உடன் கிடைக்கும் பி.எஸ்.6 ஸ்ப்ளெண்டர் ப்ளஸ், பி.எஸ்.4 மாடலைவிட ரூ.6800 – ரூ.7100 ரூபாய் அதிக விலையில் வெளியிடப்பட்டுள்ளது. பெட்ரோல் டேங்க்கின் அளவு 9.8 லிட்டராக குறைக்கப்பட்டு உள்ளது. மேலும் கார்புரேட்டருக்குப் பதிலாக எக்ஸ்.சென்ஸ் உடனான ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டம் இடம்பிடித்துள்ளது. அத்துடன் இந்த புதிய பி.எஸ்.6 ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் பைக் 6% அதிக ஆக்ஸிலரேஷனையும், 9% அதிக மைலேஜையும் தரும் என்று ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது.