இந்தியாவிற்கு பாஜகவிடமிருந்து சுதந்திரம் எப்போது? – கே.எஸ். அழகிரி

இந்தியாவிற்கு பாஜகவிடமிருந்து சுதந்திரம் எப்போது? – கே.எஸ். அழகிரி

இந்தியாவின் ஒற்றுமைக்கு எதிராக பா.ஜ.க செயல்படுகிறது. அரசியல் சட்டம் பாதுகாக்கும் என்ற தான் காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது. ஆனால் இன்று பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. 

இந்தியாவிற்கு பாஜகவிடமிருந்து சுதந்திரம் எப்போது? – கே.எஸ். அழகிரி

காங்கிரஸ் அலுவலகத்தில் சுதந்திர தினம் கொண்டாட்டம் நடைபெற்றது. மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சுதந்திர தின கொடி ஏற்றினார். விழாவில் மூத்த தலைவர் குமரி அனந்தன், முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி,  “காஷ்மீரில் முன்னாள் முதல்வர்கள் இன்றைய தினம் சிறை வைத்துள்ளனர். ஜனநாயகம் சிதைந்துள்ளதற்கு இதுவும் ஒரு உதாரணம். 

இந்தியாவின் ஒற்றுமைக்கு எதிராக பா.ஜ.க செயல்படுகிறது. அரசியல் சட்டம் பாதுகாக்கும் என்ற தான் காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது. ஆனால் இன்று பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. 

தீவிரவாதம் கட்டுப்படுத்த முடியும். ஆனால் அதற்காக இரு மாநில உரிமையை பறிப்பது சரியான நடவடிக்கை இல்லை. இரண்டாவது சுதந்திரம் பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருக்கிறது. தமிழகத்தில் கூட பா.ஜ.க எதை சொன்னாலும் கேட்க கூடிய அரசாக அதிமுக இருக்கிறது. மாநில உரிமைகளை இழந்து வருகிறோம்” என்று கூறினார்.