“இந்தியாவிற்கு நாங்க போகமாட்டோம்” – போராட்டத்தில் குதித்துள்ள வங்கதேச வீரர்கள்!

“இந்தியாவிற்கு நாங்க போகமாட்டோம்” – போராட்டத்தில் குதித்துள்ள வங்கதேச வீரர்கள்!

முன்வைத்த கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் இந்திய அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க மாட்டோம் என வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் அதன் வாரியத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வங்கதேச பிரிமியர் லீக் போட்டிகளில் பல புதிய விதிமுறைகளை வங்கதேச கிரிக்கெட் வாரியம் அமல்படுத்தி அதனை அடுத்த ஆண்டிலிருந்து செயல்படுத்த திட்டமிட்டு வருகிறது. இது வங்கதேச கிரிக்கெட் வீரர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதனால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான கேப்டன் ஷகிப் அல் ஹசன் தலைமையில் வங்கதேச வீரர்கள் அதன் கிரிக்கெட் வாரியத்தை எதிர்த்து போட்டிகளை புறக்கணித்து வருகின்றனர். மேலும் 11 திட்டங்களை வகுத்து, இதனை நிறைவேற்றக்கோரி அதன் கிரிக்கெட் வாரியத்தை வலியுறுத்தி வருகின்றனர். 

shakib

இதனை நிறைவேற்ற வில்லை என்றால் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் இந்திய அணிக்கு எதிரான டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளை ஆடப்போவதில்லை எனவும் வீரர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். 19 வயதுக்குட்பட்ட வீரர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை. ஏனெனில், அவர்கள் அடுத்து வரும் உலக கோப்பையில் பங்கேற்க இருப்பதால் அதற்கான முழு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

இதுகுறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஷகிப் அல் ஹசன் கூறுகையில், வீரர்களின் எதிர்காலத்தை வங்கதேச கிரிக்கெட் வாரியம் கண்டுகொள்ளவில்லை. போட்டிகளை நடத்தி அதில் வரும் வருவாயை பெற்றுக்கொள்ள மட்டுமே அவர்கள் திட்டமிட்டு வருகின்றனர். அதற்கான திட்டங்களை அடுத்தடுத்த தொடர்களில் திணித்து வீரர்கள் எதிர் காலத்தை வீணாக்கி வருகின்றனர். இதை பார்த்துக் கொண்டு எங்களால் அமைதி காக்க முடியாது. அதனால் எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை எந்தவித சர்வதேச போட்டிகளிலும் நாங்கள் பங்கேற்க மாட்டோம். குறிப்பாக அடுத்து வரவிருக்கும் இந்தியா-வங்கதேசம் அணிகளுக்கிடையேயான தொடரில் நாங்கள் தற்போது வரை ஆடுவதற்கு முடிவு செய்யவில்லை. கிரிக்கெட் வாரியம் எடுக்கும் முடிவு பொருத்து எங்களது முடிவு அமையும் என குறிப்பிட்டார்.

-vicky