இந்தியாவிற்குள் ஒருவர்கூட சட்டவிரோதமாகக் குடியேற அனுமதிக்க முடியாது : அமித்ஷா திட்டவட்டம்!

 

இந்தியாவிற்குள் ஒருவர்கூட சட்டவிரோதமாகக் குடியேற அனுமதிக்க முடியாது : அமித்ஷா திட்டவட்டம்!

அண்டை நாடுகளிலிருந்து குடியேறியவர்களை அடையாளம் காணும்விதமாக சமீபத்தில் அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு  வெளியிடப்பட்டது.

அசாம் : இந்தியாவிற்குள் ஒருவர்கூட சட்டவிரோதமாகக் குடியேற அனுமதிக்க முடியாது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா  தெரிவித்துள்ளார்.

immigrants

அண்டை நாடுகளிலிருந்து குடியேறியவர்களை அடையாளம் காணும்விதமாக சமீபத்தில் அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு  வெளியிடப்பட்டது. இதற்கான இறுதிப்பட்டியலில் 19 லட்சத்து 6657 பேரின் பெயர்கள் இடம்பெறவில்லை. இதனால் அவர்கள் இந்தியர்கள் என்ற குடியுரிமையை இழக்க நேரிடும் சூழல் உருவாகியுள்ளது. இவர்கள்  கைதுசெய்யப்பட மாட்டார்கள் என்றும் அனைத்து சட்ட வாய்ப்புகளைச் செய்து முடிக்கும் வரை அவர்கள் மீது எந்த நடவடிக்கையும்  எடுக்கப்பட மாட்டாது என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

amit

இந்நிலையில்  உள்துறை அமைச்சர் அமித்ஷா அசாம் மாநிலம் கவுஹாத்திக்கு சென்ற நிலையில் அவரிடம்  பாஜக மாநிலத் தலைவர் ரஞ்சித் தாஸ் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக மனு ஒன்றை அளித்தார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தேசிய குடிமக்கள் பதிவேட்டில் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை குறித்து அமித்ஷாவிடம் விரிவாகப் பேசினேன். இந்தியாவிற்குள் ஒருவர்கூட சட்டவிரோதமாகக் குடியேற அனுமதிக்க முடியாது என்று அவர் உறுதி அளித்தார். மேலும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்’ என்றார்.