இந்தியாவின் மோசமான முதல்வரா பினராயி விஜயன் – கேரள அரசு அதிர்ச்சி

 

இந்தியாவின் மோசமான முதல்வரா பினராயி விஜயன் – கேரள அரசு அதிர்ச்சி

இந்தியாவின் மோசமான முதல்வர் பினராயி விஜயன் என கூகுளில் வெளியாகி இருப்பதால் கேரள அரசு அதிர்ச்சியடைந்துள்ளது.

திருவனந்தபுரம்: இந்தியாவின் மோசமான முதல்வர் பினராயி விஜயன் என கூகுளில் வெளியாகி இருப்பதால் கேரள அரசு அதிர்ச்சியடைந்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக இந்து அமைப்பினர், பாஜகவினர் உள்ளிட்டோர்  போராட்டம் நடத்தி வருகின்றனர். இருப்பினும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்திட வேண்டும் என கேரள அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது. மேலும், கனகதுர்கா, பிந்து என்ற இரு பெண்கள் காவல்துறை பாதுகாப்போடு சபரிமலை சன்னிதானம் சென்று ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

இதனையடுத்து கேரள அரசு பெண்களுக்கு சம உரிமை வழங்கி வருகிறது என பல்வேறு தரப்பினர் தங்களது பாராட்டை அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் பினராயி விஜயன் திட்டமிட்டே இந்து மதத்தை அவமதிக்கிறார் என பாஜகவினர் உள்ளிட்டோர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியாவின் மோசமான முதல்வர் என பினராயி விஜயனின் பெயர் கூகுள் இணைய தளத்தில் வெளியாகி இருக்கிறது. இதனால் அம்மாநில அரசு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.