இந்தியாவின்   முதல் கொரானா நோயாளி கொச்சினில் மரணம்? -கேரளாவில் மீண்டும் கொரானா  பரபரப்பு …

 

இந்தியாவின்   முதல் கொரானா நோயாளி கொச்சினில் மரணம்? -கேரளாவில் மீண்டும் கொரானா  பரபரப்பு …

கொரோனா வைரஸ் அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், இத்தாலி, பிரான்ஸ், ரஷ்யா, ஸ்பெயின், இந்தியா உள்ளிட்ட 45 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது.
உலகளவில் இந்த நோயால்  இறந்தவர்களின் எண்ணிக்கை 2,800 க்கும் அதிகமாக உள்ளது,

கொரோனா வைரஸ் அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், இத்தாலி, பிரான்ஸ், ரஷ்யா, ஸ்பெயின், இந்தியா உள்ளிட்ட 45 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது.
உலகளவில் இந்த நோயால்  இறந்தவர்களின் எண்ணிக்கை 2,800 க்கும் அதிகமாக உள்ளது, மற்றும் இது  தோன்றிய சீனா, மிக மோசமான பாதிப்புக்குள்ளானது, 78,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளுடன்  2,700 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

corona

இந்நிலையில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக   மலேசியாவில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வந்த பேயன்னூரைச் சேர்ந்த 36  வயது நபர்   வியாழக்கிழமை இரவு கொச்சின் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அவர் வெள்ளிக்கிழமை அதிகாலை  மருத்துவக் கல்லூரியின் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டார், ஏனெனில் அவருக்கு  இருமல் இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் தனி வார்டில் அனுமதித்தனர் .
பிறகு அவருக்கு நடத்திய   விரிவான சோதனையில் , அவருக்கு நிமோனியா இருப்பது உறுதியானது .

corona virus 09

மேலும் அவருக்கு நடத்திய கொரானா வைரஸ் முதற்கட்ட சோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்தாலும் ,இரண்டாவது கட்ட சோதனைக்கு பிறகே கொரானா பற்றிய முடிவு சொல்லப்படுமென ஆலப்புழாவின் தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட் (என்.ஐ.வி) கூறியது.  ஆனால் அவர் இன்று அதிகாலை திடீரென  மரணமடைந்தார்.  கடுமையான நிமோனியா மற்றும் சுவாசக் கோளாறு ஆகியவை மரணத்திற்கு காரணம் என்று மருத்துவமனை வட்டாரங்கள் மேற்கோள் காட்டின.
இருந்தாலும் அவர் கொரானாவால் இறந்திருக்கலாமென  கேரளா மீண்டும்  பரபரப்புக்குள்ளாகியுள்ளது  .சனிக்கிழமை நிலவரப்படி, ஒருவர் மருத்துவக் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் இருக்கிறார், 12 பேர் வீட்டுக்குள்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், மாவட்டத்தில்  தனிமைப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 40 ஆக உள்ளது . இந்த மாவட்டத்திலிருந்து ஆறு மாதிரிகள் ஆலப்புழாவின் என்.ஐ.வி.க்கு அனுப்பப்பட்டுள்ளன.