இந்தியாவின் மிகப்பெரிய ஈரடுக்கு மேம்பாலம்: மோடி திறந்து வைத்தார்

 

இந்தியாவின் மிகப்பெரிய ஈரடுக்கு மேம்பாலம்: மோடி திறந்து வைத்தார்

இந்தியாவிலேயே மிகப்பெரிய ரயில் மற்றும் சாலை போக்குவரத்துக்கான ஈரடுக்கு பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்துள்ளார்.

திப்ரூகர்: இந்தியாவிலேயே மிகப்பெரிய ரயில் மற்றும் சாலை போக்குவரத்துக்கான ஈரடுக்கு பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்துள்ளார்.

அசாம் மாநிலம் திப்ரூகர் மற்றும் தேமஜி மாவட்டங்களை இணைக்கும் விதத்தில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே, சுமார் 3200 ஜோடி ரூபாய் மதிப்பீட்டில், 5 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாலம் கட்ட கடந்த 1997ம் ஆண்டு அப்போதைய பிரதமர் தேவகவுடா அடிக்கல் நாட்டினார். ஆனால், பிரம்மபுத்திரா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பருக்கினால், கட்டுமானப் பணிகள் தாமதமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேம்பால பணியை 5900 கோடி ரூபாய் செலவில் ரயில் மற்றும் சாலை போக்குவரத்துக்காக ஈரடுக்கு பாலமாக மாற்ற மத்திய பாஜக அரசு முடிவு செய்தது. அதன்படி, தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ள அந்த பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

மேலும், சீன எல்லை அருகே அமைந்துள்ளதால் பாதுகாப்பு காரணங்களுக்காக ராணுவ டேங்குகள் சென்றாலும், போர் விமானங்கள் தரையிறங்கினாலும் தாங்கும் வல்லமையுடன் இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.