இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை காட்டிலும் மிகவும் குறையும்- எச்சரிக்கும் பன்னாட்டு நிதியம்

 

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை காட்டிலும் மிகவும் குறையும்- எச்சரிக்கும் பன்னாட்டு நிதியம்

இந்த ஆண்டிலும், வரும் ஆண்டிலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை காட்டிலும் மிகவும் குறையும் என பன்னாட்டு நிதியம் எச்சரிக்கை செய்துள்ளது.

கடந்த சில காலாண்டுகளாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது.  குறிப்பாக இந்த நிதியாண்டில் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) பொருளாதார வளர்ச்சி 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 சதவீதமாக குறைந்தது. இதனையடுத்து பொருளாதார வளர்ச்சிக்கு புத்துயிர் கொடுக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக களம் இறங்கியுள்ளது.

ஜி.டி.பி.

இந்நிலையில், பன்னாட்டு நிதியம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீட்டை குறைத்துள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்பான மதிப்பீட்டை குறைத்து இருந்தது. தற்போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2019ல் 7 சதவீதமாகவும், 2020ல் 7.2 சதவீதமாகவும் குறையும் என பன்னாட்டு நிதியம் கூறியுள்ளது.

பன்னாட்டு நிதியம்

உள்நாட்டில் தேவை குறைந்தது, நிறுவனங்கள் மற்றும் சுற்றுப்புறசூழல் ஒழுங்குமுறையில் நிலையற்றதன்மை, வங்கிசாரா நிதிநிறுவனங்களின் பலகீனமான நிலை போன்ற காரணங்களால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை காட்டிலும் குறையும் என பன்னாட்டு தெரிவித்துள்ளது.