இந்தியாவின் பணக்கார கட்சிகள் லிஸ்டில் திமுக இரண்டாம் இடம்..!

 

இந்தியாவின் பணக்கார கட்சிகள் லிஸ்டில் திமுக இரண்டாம் இடம்..!

ஆண்டுதோறும் ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான சங்கம் இந்திய அளவிலான பணக்கார கட்சிகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

ஆண்டுதோறும் ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான சங்கம் இந்திய அளவிலான பணக்கார கட்சிகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதற்காக,  இந்தியத் தேர்தல் ஆணையத்தில் அனைத்து தேசிய மற்றும் மாநில காட்சிகளும் வரவு செலவு கணக்கையும், கட்சியின் சொத்து விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும். 

Samajwadi party first place

மொத்தமாக 41 கட்சிகளின் சொத்து விவரங்கள் கணக்கில் எடுக்கப்பட்டு, அனைத்துக் கட்சிகளின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,320 கோடி எனக் கணக்கிடப் பட்டது. அதனையடுத்து, இந்த ஆண்டிற்கான (2018-2019) பணக்கார கட்சிகளின் விவரங்களை ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான  சங்கம் வெளியிட்டுள்ளது. அதில், சமாஜ்வாதி கட்சி ரூ.523 கோடியுடன் முதல் இடத்தையும், திமுக கட்சி ரூ.191 கோடியுடன் இரண்டாம் இடத்தையும், அதிமுக கட்சி ரூ.189 கோடியுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது. 

DMK second place

இரு ஆண்டுகளுக்கு முன் பணக்கார கட்சிகளின் பட்டியலில் முதல் இடத்திலிருந்த அதிமுகவை, முந்தியடித்து திமுக இந்த ஆண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADMK third place