இந்தியாவின் நிலைமை கருத்தில் கொண்டு வித்தியாசமான நடவடிக்கைகளை எடுங்க….. பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய ராகுல் காந்தி

 

இந்தியாவின் நிலைமை கருத்தில் கொண்டு வித்தியாசமான நடவடிக்கைகளை எடுங்க….. பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய ராகுல் காந்தி

இந்தியாவின் நிலைமை கருத்தில் கொண்டு, கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பெரிய நாடுகள் பின்பற்றும் முழு முடக்க மூலோபாயத்தை பின்பற்றாமல் வித்தியசமான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

காங்கிரசின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: அதிவேகமாக பரவி வரும் கோவிட்-19 வைரஸை கட்டுப்படுத்த அவசர மற்றும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள உலகம் தள்ளப்பட்டுள்ளது. இந்தியா மூன்று வார முடக்கத்தின் மத்தியில் உள்ளது. மத்திய அரசு இதனை மேலும் நீடிக்கும் என சந்தேகிக்கிறேன். 

முடக்கம்

இந்தியாவின் நிலைமைகள் தனித்துவமானது என்பதை நாம் புரிந்து கொள்வது முக்கியமானது. ஆகையால் பெரிய நாடுகள் பின்பற்றும் முழு முடக்க மூலோபாயத்தை காட்டிலும் வித்தியாசமான நடவடிக்கைகள் நமக்கு தேவை. முழுமையான மூடலின் விளைவுகள் கொரோனா வைரஸிலிருந்து எழும் இறப்பு எண்ணிக்கை பேரழிவு தரும். பெரிய அர்ப்பணிப்புமிக்க மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சைக்கு தேவையான மருத்துவ கருவிகளை தயாரிப்பதற்கான உற்பத்தி ஆலைகளை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக உருவாக்க வேண்டும்.

பிரதமர் மோடி

வேகமாய் பரவும் தொற்று நோய் குறித்து தெளிவான நிலையை தெரிந்து கொள்ள சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் பெரும் நகரங்களில் சிக்கி தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மத்திய அரசு உதவிகள் வழங்க வேண்டும். இந்த பயங்கரமான சவால்களை எதிர்த்து போராடுவதிலும், மீண்டு வருவதிலும் மத்திய அரசுடன் நாம் இணைந்து நிற்கிறோம்