இந்தியாவின் தோல்விக்கு தோனி காரணமல்ல! ட்விட்டரில் ட்ரெண்டாகும்  #என்றும்_தலதோணி 

 

இந்தியாவின் தோல்விக்கு தோனி காரணமல்ல! ட்விட்டரில் ட்ரெண்டாகும்  #என்றும்_தலதோணி 

உலகக் கோப்பை 2019 கிரிக்கெட் தொடர் பிர்மிங்கம் நகரின் எட்ஜ்பேஸ்டன் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின.

#என்றும் தல தோனி என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

உலகக் கோப்பை 2019 கிரிக்கெட் தொடர் பிர்மிங்கம் நகரின் எட்ஜ்பேஸ்டன் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின. இதில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியை தழுவியது இந்திய அணி. உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பெரும் முதல் தோல்வி இதுவே. 

ss

இந்நிலையில்  இந்திய அணியின் தோல்விக்கு தோனி தான் காரணம் என பலர் விமர்சனங்களை முன்வைத்தனர். தோனி 31 பந்துகளில் 42 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். கடைசி நேரத்தில் தோனி அதிரடியாக விளையாடாததே இந்திய அணியின் தோல்விக்குக் காரணம் என்று கூறி நேற்று இரவு முதல் மீம்ஸ்கள் பறக்க ஆரம்பித்தது. 

ss

இந்நிலையில் தோனிக்கு ஆதரவாக களமிறங்கிய அவரது ரசிகர்கள் தோனியால் தோல்வியடையவில்லை எனக்கூறி என்றும் தல தோணி என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 
.