இந்தியாவின் காஷ்மீர்  நடவடிக்கையால் அமைதிக்கு அச்சுறுத்தல்- பாகிஸ்தான் குடியரசுதலைவர் 

 

இந்தியாவின் காஷ்மீர்  நடவடிக்கையால் அமைதிக்கு அச்சுறுத்தல்- பாகிஸ்தான் குடியரசுதலைவர் 

இந்தியவின் காஷ்மீர் நடவடிக்கையால் பிராந்தியத்தில் அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் குடியரசு தலைவர் ஆரிப் ஆல்வி கூறியுள்ளார்.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நேற்று பாகிஸ்தானில் புதிய நாடாளுமன்ற ஆண்டின் தொடக்கமாக நாடாளுமன்றத்தின் கூட்டுத்தொடர் தொடங்கியது. இதில் கலந்து கொண்ட அநநாட்டு குடியரசு தலைவர் ஆரிப் ஆல்வி பேசுகையில் கூறியதாவது: இந்தியாவின் காஷ்மீர் நடவடிக்கையால் பிராந்திய அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கம்

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கியதன்வாயிலாக இந்தியா தனது அரசியலமைப்பு மற்றும் சிம்லா ஒப்பந்த்தை மிறியுள்ளது. காஷ்மீர் மக்களுக்கான பாகிஸ்தானின் ஆதரவு தொடரும். பாகிஸ்தான் காஷ்மீர் சகோதர்களோடு இருக்கிறது. நாம் அவர்களுக்கு தொடர்ந்து தார்மீக ஆதரவு அளிப்போம். நாம் அனைவரும் மற்றும் எப்போதும் காஷ்மீர் மக்களோடு இருப்போம்.

காஷ்மீர் மாநிலம் யூனியன் பிரதேசங்களாக பிரிப்பு

இந்தியாவின் செயல்பாடுகள் பிராந்திய அமைதிக்கு அச்சுறுத்தலாக இருந்தது. ஆனால் பாகிஸ்தான் இந்தியாவின் போர்குணத்துக்கு பேச்சுவார்த்தை வாயிலாக பதில் அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.