இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் மீண்டும் மூக்கை நுழைக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்….

 

இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் மீண்டும் மூக்கை நுழைக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்….

இந்தியாவில் நடைபெறும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான பெரும் போராட்டத்தை திசை திருப்ப, இந்திய ராணுவம் தவறான கொடி செயல்பாட்டில் ஈடுபடுவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் டிவிட் செய்துள்ளார்.

பாகிஸ்தான் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. மேலும் ஏராளமான பிரச்சினைகள் காரணமாக மீள முடியாத நிலையில் அந்நாடு உள்ளது. ஆனால் அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை வாடிக்கையாக வைத்து உள்ளார். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட போது பூமிக்கும், வானத்துக்கும் குதிகுதியென குதித்தார்.

பிபின் ராவத்

தற்போது குடியுரிமை திருத்த சட்டம் விவகாரத்தில் தனது மூக்கை நுழைக்கிறார் இம்ரான் கான். கடந்த சில தினங்களுக்கு முன் நம் நாட்டு ராணுவ தளபதி எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் எந்த நேரமும் நிலைமை மோசமாகலாம் என கூறி இருந்தார். இதனை, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களுடன் தொடர்பு படுத்தி இம்ரான் பேசி உள்ளார்.

எல்லை கட்டுப்பாட்டு பகுதி

இம்ரான் கான் தனது டிவிட்டரில், எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நிலைமை மோசமயைக்கூடும் என்ற  இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் அறிக்கை,  உள்நாட்டு குழப்பத்திலிருந்து கவனத்தை திசை திருப்ப இந்தியா மேற்கொண்ட தவறான கொடி நடவடிக்கை கவலை எழுப்பியுள்ளது. அந்த போராட்டங்கள் (குடியுரிமை சட்ட எதிர்ப்பு) அதிகரித்தால், பாகிஸ்தானுக்கு இந்தியாவின் அச்சுறுத்தலும் அதிகரிக்கும். இந்தியா தனது உள்நாட்டு குழப்பத்தை திசை திருப்பவும், இந்து தேசியவாதத்தை திரட்டுவதற்காக போர் வெறித்தனத்தை தூண்டவும் இது போன்ற செயலை செய்தால், சரியான பதிலடி கொடுப்பதை தவிர பாகிஸ்தானுக்கு வேறுவழியில்லை இல்லை என பதிவு செய்து இருந்தார்.