இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட அபிநந்தன்; கடக்க வேண்டிய சோதனைகள்?

இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட அபிநந்தன்; கடக்க வேண்டிய சோதனைகள்?

பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் இந்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் இந்திய அரசாங்கத்தின் பல்வேறு சோதனைகளை கடக்க வேண்டியுள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் இந்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் இந்திய அரசாங்கத்தின் பல்வேறு சோதனைகளை கடக்க வேண்டியுள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு தீவிரவாதிகள் முகாமிட்டுள்ள பகுதி என பாகிஸ்தானில் சில இடங்களை இந்திய விமானப்படை தாக்கியது. இதனால் இரு நாடுகளுக்கிடையே பிரச்சனை தொடங்கியது. இந்திய விமானப்படையும், பாகிஸ்தானும் மோதிக்கொண்டன, இதில் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். 

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரு நாடுகளுக்கு இடையே அமைதியை நிலைநாட்ட அபிநந்தனை விடுதலை செய்வதாக அறிவித்திருந்தார். அதன்படி அபிநந்தனை இன்று இந்திய அரசாங்கத்திடம் ஒப்படைத்தது பாகிஸ்தான் அரசாங்கம். இந்திய விமானப்படை வீரர்கள் பிரபாகரன் மற்றும் ஆர்.ஜி.கே.கபூர் ஆகியோர் அபிநந்தனை வரவேற்று அழைத்து வருகின்றனர்.

அபிநந்தனுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும், பாகிஸ்தான் ராணுவத்தினர் அவருக்கு வழங்கிய டீயில் ஸ்லோ பாய்சன் இருக்கலாம் என பல்வேறு யூகங்கள் முன்னாள் ராணுவத்தினரால் முன்வைக்கப்படுகிறது. அதேபோல் அபிநந்தனிடம் விசாரணை மேற்கொள்ளப்படும், ராணுவ ரகசியங்கள் எதையும் வெளியே சொன்னாரா என்பது பற்றி கேள்வி எழுப்பப்படும். மீண்டும் அவர் பணிக்கு செல்வதற்கு முன் இப்படியான பல சோதனைகளை அவர் கடக்க வேண்டியுள்ளது.