இந்தியர்கள் போன்ற அப்பாவிகளை நான் பார்த்ததில்லை… அரசு என்ன சொன்னாலும் நம்புறாங்க…. ப.சிதம்பரம்

 

இந்தியர்கள் போன்ற அப்பாவிகளை நான் பார்த்ததில்லை… அரசு என்ன சொன்னாலும் நம்புறாங்க…. ப.சிதம்பரம்

இந்தியர்கள் போன்ற அப்பாவிகளை நான் பார்த்ததில்லை. செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து அரசு என்ன சொன்னாலும் நம்புகிறார்கள் என ப.சிதம்பரம் தெரிவித்தார்.

சென்னையில் நேற்று நடைபெற்ற இலக்கிய விழாவில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது: இந்திய மக்களை போன்ற அப்பாவிகளை நான் பார்தததில்லை. செய்திதாள்களில் சில செய்திகள் வந்தாலும் அதை நாம் நம்புகிறோம். எதை வேண்டுமானாலும் நம்புவோம்.

கிராமங்களுக்கு மின்வசதி

நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் மின் வசதி வழங்கப்பட்டுள்ளது, 99 சதவீத குடும்பங்களில் கழிவறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது போன்ற கூற்றுக்களும் நம்பப்படுகிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டம் குறித்தும் அப்படிதான் நம்பப்படுகிறது. அண்மையில் டெல்லியை சேர்ந்த எனது டிரைவர் ஒருவர் இந்த திட்டத்தின்கீழ் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறினார். ஆனால் அதை செய்ய முடியாது என்றார். 

ஆயுஷ்மான் பாரத் திட்டம்

நான் அவரிடம் (கார் டிரைவர்) அவரிடம் ஆயுஷ்மான் அட்டை இருக்கிறதா என கேட்டேன். அவர் உடனே ஒரு அட்டையை காட்டினார். அதை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி சொன்னேன். அவரும் பல மருத்துவமனைகளுக்கு சென்றார். ஆனால் அனைத்து மருத்துவமனைகளிலும் இது போன்ற திட்டம் இருப்பது குறித்து தெரியாது என தெரிவித்துள்ளார்கள். ஆனால் ஆயுஷ்மான் திட்டம் நாடு முழுவதும் வந்து விட்டதாக நாம் நம்புகிறோம். எந்தவொரு நோய்க்கும் பணம் செலவிடாமல் சிகிச்சை (ஆயுஷ்மான் திட்டத்தை குறிப்பிட்டு) செய்யப்படும் என நாம் நம்புகிறோம். நாங்கள் அப்பாவிகள். பல செய்திகளும்,தரவுகளும் உண்மைக்கு புறம்பானவையாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.