இந்தியர்கள் அனைவரும் இந்துக்கள் என்றால் மற்ற நாடுகளில் பிறந்த இந்துக்கள்?… ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடம் கேள்வி கேட்கும் திக்விஜய சிங்……

 

இந்தியர்கள் அனைவரும் இந்துக்கள் என்றால் மற்ற நாடுகளில் பிறந்த இந்துக்கள்?… ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடம் கேள்வி கேட்கும் திக்விஜய சிங்……

இந்தியர்கள் அனைவரும் இந்துக்கள் என்றால் மற்ற நாடுகளில் பிறந்த இந்துக்களின் அடையாளம் என்ன? என ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு கேள்வி கேட்டுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங்.

காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான திக்விஜய சிங், குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார். மேலும், டெல்லி ஷாஹீன பாக்கில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் குறிப்பாக முஸ்லிம் பெண்கள் நடத்தி வரும் போரட்டத்தில் திக்விஜய சிங் ஒருநாள் நள்ளிரவில் கலந்து கொண்டு மக்களுடன் ஒற்றுமையுடன் வெளிப்படுத்தினார்.

ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள்

திக்விஜய சிங் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: நான் முஸ்லிம்கள் பக்கம் சாய்ந்திருப்பதாக மக்கள் சொல்கின்றனர். நான் முஸ்லிம்கள் அல்து இந்துக்கள் பக்கம் சாய்ந்திருக்கவில்லை. நான் இந்தியா பக்கம் சாய்ந்திருக்கிறேன். எனது வலிமை இந்த நாட்டின் பன்முகத்தன்மையில் ஒற்றுமையிலிருந்து வருகிறது. நான் முதலில் இந்தியன் அதன் பிறகுதான் இந்து அல்லது எதுவாக இருந்தாலும்.

வெளிநாட்டு இந்துக்கள்

இந்தியாவில் வசிப்பவர்கள் எல்லோரும் இந்துக்கள் என ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கூறுகின்றனர். அவர்கள் வாதம் அல்லது தர்க்கத்தின்படி, அமெரிக்கா, ஆப்பரிக்கா மற்றும் இதர நாடுகளில் பிறந்த இந்துக்களின் அடையாளம் என்ன?. வேலைவாய்ப்பின்மை பிரச்சனையிலிருந்து இளைஞர்களை ஆர்.எஸ்.எஸ். திசை திருப்புகிறது மற்றும் அவர்களை மத நடவடிக்கைகளில் ஈடுபட வைக்கிறது. இளைஞர்கள் தங்களது மதகடமைகளை நிறைவேற்றுங்கள் என நான் கேட்டுக்கொள்கிறேன். ஆனால் அவர்களை ஆர்.எஸ்.எஸ். அழைத்து செல்லக்கூடாது என வலியுறுத்துகிறேன். வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்காக தேசிய பதிவேடு கொணடு வருவாரா மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா?. இவ்வாறு அவர்  தெரிவித்தார்.