இந்தியர்களுக்கு தூய்மை அக்கறை இல்லை – ட்ரம்ப்! எங்களுக்கு தெரியும் நீ மூடு!

இந்தியர்களுக்கு தூய்மை அக்கறை இல்லை – ட்ரம்ப்! எங்களுக்கு தெரியும் நீ மூடு!

இளவரசர் சார்லஸுடன் தனக்கு 15 நிமிட அப்பாய்ன்ட்மென்ட் இருந்ததாகவும், ஆனால் பேச்சு சுவாரஸ்யத்தில் ஒன்றரை மணி நேரம் தாங்கள் பேசியதாகவும், ஆனாலும் சார்லஸ்தான் அதிகம் பேசிக்கொண்டிருந்ததாகவும், பேச்சுவார்த்தையின்போது பருவநிலை மாற்றம்குறித்தே சார்லஸ் அதிகம் கவலை கொண்டதாகவும் ட்ரம்ப் செய்தியாளரிடம் தெரிவித்தார்.

அதிகரித்துவரும் பருவநிலை மாற்றங்களுக்கு இந்தியா, சீனா, மற்றும் ரஷ்யர்களே காரணம் என்றும், இந்நாட்டவர்களுக்கு சுத்தம் குறித்தோ மாசு குறித்தோ அக்கறை இல்லை என்றும் உலக நாட்டாமை ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் மூன்று நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள ட்ரம்ப், சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். பேட்டியின்போது “எல்லாவகையான அளவீடுகளை கொண்டு கணக்கிட்டாலும், மாசற்ற பருவநிலை கொண்ட நாடுகளில் அமெரிக்கா முதன்மையானது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Trump

இளவரசர் சார்லஸுடன் தனக்கு 15 நிமிட அப்பாய்ன்ட்மென்ட் இருந்ததாகவும், ஆனால் பேச்சு சுவாரஸ்யத்தில் ஒன்றரை மணி நேரம் தாங்கள் பேசியதாகவும், ஆனாலும் சார்லஸ்தான் அதிகம் பேசிக்கொண்டிருந்ததாகவும், பேச்சுவார்த்தையின்போது பருவநிலை மாற்றம்குறித்தே சார்லஸ் அதிகம் கவலை கொண்டதாகவும் ட்ரம்ப் செய்தியாளரிடம் தெரிவித்தார்.

மேலும், “சீனா, இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகளில் சுவாசிக்க நல்ல காற்று இல்லை, குடிக்க நல்ல குடிநீர் இல்லை, அதேப்போல பருவநிலை மற்றும் தூய்மை குறித்த அக்கறையும் இந்நாட்டவருக்கு இல்லை” என்றும் திருவாய் மலர்ந்தருளியுள்ளார் ட்ரம்ப். ஏற்கெனவே கடந்த ஆண்டு பருவநிலை மாற்றங்களுக்கான பாரீஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேற ட்ர்ம்ப்தான் காரணமானவர் என குறிப்பிடத்தக்கது.