இந்தியப் பொருளாதாரம் கடும் நோய்க்கு ஆளாகியுள்ளது  – ப.சிதம்பரம் 

 

இந்தியப் பொருளாதாரம் கடும் நோய்க்கு ஆளாகியுள்ளது  – ப.சிதம்பரம் 

இந்திய பொருளாதாரம் கடும் நோய்க்கு ஆளாகி இருக்கிறது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

இந்திய பொருளாதாரம் கடும் நோய்க்கு ஆளாகி இருக்கிறது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

திருச்சியில் உள்ள புனித வளனார் கல்லூரியில் 2020-21 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை குறித்தான கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு நிதி நிலை அறிக்கை குறித்து உரையாற்றினார். 

p chidambaram

அப்போது பேசிய அவர்,  “பொது துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல், ஏர் இந்தியா ஆகிய நிறுவனங்கள் மடிந்து விட்டன. இந்த நிறுவனங்களுக்கான தேவை ஆரம்பகாலத்தில் இருந்தது. ஆனால்  தற்போது மற்ற நிறுவனங்களுடன் போட்டி அதிகரித்துள்ளதால் பி.எஸ்.என்.எல்  நிறுவனத்தை நடத்த முடியாது. தற்போதைய சூழலில் பொதுத்துறை நிறுவனங்கள் துரிதமாகவும், துணிவோடும் செயல்பட முடியாது. சில நிறுவனங்களை அரசு நடத்த வேண்டும் என்கிற அவசியமும் இல்லை. இந்திய பொருளாதாரம் கடும் நோய்க்கு ஆளாகி இருக்கிறது நோயாளியாகியுள்ள பொருளாதாரம் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்வதைத் தவிர வேறு வழியில்லை” என தெரிவித்தார்.