இந்தியன் 2 begins: ஷூட்டிங்கிற்கு தயாரான பிரபலம்

 

இந்தியன் 2 begins: ஷூட்டிங்கிற்கு தயாரான பிரபலம்

இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் துவங்கியுள்ளதாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். 

இந்தியன் 2 begins: ஷூட்டிங்கிற்கு தயாரான பிரபலம்

சென்னை: இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் துவங்கியுள்ளதாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். 

‘இந்தியன்’ படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் 22 வருடங்களுக்குப் பிறகு ‘இந்தியன் 2’ படம் எடுக்க முடிவு செய்தனர். அதன்படி ஷங்கர் இயக்கவுள்ள இந்த படத்தை  லைகா புரடக்‌ஷன் தயாரிக்கிறது. இதில் முக்கிய வேடத்தில் காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

படத்தின் படப்பிடிப்பு evp பிலிம் சிட்டியில் பிரமாண்டமாக செட் அமைத்து விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஆனால் கமல் அரசியல்,  பிக் பாஸ் என்று தொடர்ச்சியாக பிஸியாகி விட்டதால் படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் அறிவித்தார். 

அதன்படி இன்று சென்னையில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த ஷெடியூலில் சித்தார்த், பிரியா பவானி ஷங்கர் மற்றும் ரகுல் ப்ரீத் உள்ளிட்டோரின் காட்சிகள் படமாக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இப்படம் வரும் 2021ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.