‘இந்தியன் 2’ வில்லனும் இவர் தானா?

 

‘இந்தியன் 2’ வில்லனும் இவர் தானா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘இந்தியன் 2’ படத்தின் வில்லனாக ‘2.0’ நடிகர் அக்ஷய்குமார் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘இந்தியன் 2’ படத்தின் வில்லனாக ‘2.0’ நடிகர் அக்ஷய்குமார் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினி நடித்துள்ள ‘2.0’ படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் நடிக்கவிருக்கும் ‘இந்தியன் 2’ படத்தை ஷங்கர் இயக்கவுள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள ‘2.0’ படத்தில் ஹீரோவும், வில்லனுமாக மிரட்டியுள்ள நடிகர் அக்ஷய்குமார், தற்போது ’இந்தியன் 2’ படத்திலும் நடிக்கவிருப்பதாக தெரிகிறது. முன்னதாக கமல்ஹாசனுக்கு வில்லனாக நடிக்க பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனை அனுகியதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அக்ஷய்குமாரின் பெயர் அடிப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

akshay

தற்போது ‘இந்தியன் 2’ படத்திற்காக பிரம்மாண்ட செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், அவருக்கு பதில் காஜல் அகர்வால் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், போலீஸ் அதிகாரியாக சிம்பு நடிக்கவுள்ளதாகவும், மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.