இந்தியன் 2 விபத்து: படப்பிடிப்பு தளத்திற்கு தடை 

 

இந்தியன் 2 விபத்து: படப்பிடிப்பு தளத்திற்கு தடை 

இந்தியன் – 2 படப்பிடிப்பு தளத்தில் ஏ‌ற்பட்ட கொடூர விபத்து தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளா‌க்கியது. சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே நிகழ்ந்த கோர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து திரைப்படத்தில் இணை இயக்குநராக பணியாற்றும் குமார் என்பவர் நரசதப்பேட்டை காவல்நிலையத்தில் லைகா நிறுவனம் மீது புகார் அளித்தார்.

இந்தியன் – 2 படப்பிடிப்பு தளத்தில் ஏ‌ற்பட்ட கொடூர விபத்து தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளா‌க்கியது. சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே நிகழ்ந்த கோர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து திரைப்படத்தில் இணை இயக்குநராக பணியாற்றும் குமார் என்பவர் நரசதப்பேட்டை காவல்நிலையத்தில் லைகா நிறுவனம் மீது புகார் அளித்தார். அதில்,  தயாரிப்பு நிறுவனம் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை என்றும், கிரேன் ஆபரேட்டர் அஜாக்கிரதையாக செயல்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்தியன் 2:படப்பிடிப்பு தளம்

புகாரின் அடிப்படையில் நசரத்பேட்டை காவல்துறையினர் கிரேன் ஆபரேட்டர் ராஜன், தயாரிப்பு மேலாளர் சுந்தர்ராஜன் மற்றும் விபத்தில் தொடர்புடையவர்கள் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு ‌செய்தனர். இந்நிலையில் சென்னையில் தலைமறைவாக இருந்த கிரேன் ஆபரேட்டர் ராஜன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பாக இயக்குநர் ஷங்கர், நடிகர் கமல்ஹாசனிடம் விசாரணை நடத்தப்படலாம் என்று வெளியான தகவல் வதந்தி என்பது தெரியவந்துள்ளது. விபத்து நடந்தபோது சம்பவ இடத்திலிருந்த அனைவரிடமும் விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில்  விபத்து நடந்த தனியார் படப்பிடிப்புத் தளத்திற்கு தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.தென்னிந்திய திரைப்பட ஊழியர் சம்மேளனம் (FEFSI) குறிப்பிட்ட இந்த ஸ்டுடியோவுக்கு தடை விதித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் அந்த இடத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்படவில்லை என்றும், அனுமதியளிக்குமாறு உரிமையாளர்கள் கோரியதையடுத்தே ஸ்டூடியொ மீண்டும் திறக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.