இந்தியன் 2 விபத்து: நடிகர் கமல், ஷங்கருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த முடிவு!

 

இந்தியன் 2 விபத்து: நடிகர் கமல், ஷங்கருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த முடிவு!

இவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை அருகே உள்ள நாசரத்பேட்டை ஈ.வி.பி பிலிம் சிட்டியில் இந்தியன் 2 படப்பிடிப்பில் 3 பேர் கிரேன்  அறுந்து விழுந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்தியன் -2 படப்பிடிப்பில் உடைந்து விழுந்த கிரேன் துறைமுகத்திலிருந்து வரவழைக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதில்  கிரேனுக்கு அடியில் சிக்கி உதவி இயக்குநர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர்கள் மது மற்றும் சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வழக்கமாக சினிமாக்களில் 40 அடி உயரத்திற்குப் பயன்படுத்தக் கூடிய கிரேன்களையே  பயன்படுத்தி வந்த நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்புக்காக 200 அடி உயரம் வரை உபயோகிக்க கூடிய கிரேனை பயன்படுத்தியுள்ளனர். 

 

இந்நிலையில் நடிகர் கமல் ஹாசனின் இந்தியன்-2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக நடிகர்  கமல் மற்றும் இயக்குநர் ஷங்கருக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது. அதேபோல் விபத்தில் காயமடைந்தவர்களை விசாரிக்க போலீசார் முடிவெடுத்துள்ளனர். 

 

முன்னதாக லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல்   நசரத்பேட்டை போலீசார்  கிரேன் ஆபரேட்டர் ராஜன் மீதும்  அஜாக்கிரதையாக இருந்து மரணத்தை ஏற்படுத்துதல், உபகரணங்களைத் தவறாக கையாண்டு மரணத்தை விளைவித்தல்  உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.