இந்தியன் 2 விபத்து: இறந்தவர்களின் உடலுக்கு கமல், ஷங்கர் நேரில் அஞ்சலி!

 

இந்தியன் 2  விபத்து: இறந்தவர்களின் உடலுக்கு கமல், ஷங்கர் நேரில் அஞ்சலி!

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை அருகே உள்ள நாசரத்பேட்டை ஈ.வி.பி பிலிம் சிட்டியில் இந்தியன் 2 படப்பிடிப்பில் 3 பேர் கிரேன்  அறுந்து விழுந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். படப்பிடிப்பு தளத்தில், ஸ்டுடியோ லைட் வைக்கப்பட்டிருந்த கிரேன் ஒன்று அறுந்து விழுந்து இந்த விபத்து ஏற்பட்டது. இதில்  கிரேனுக்கு அடியில் சிக்கி உதவி இயக்குநர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர்கள் மது மற்றும் சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

ttn

இதை தொடர்ந்து இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில்  பலியானவர்களின் உடல்கள் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.   இந்நிலையில் இறந்த மூவரின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நடிகர் கமல்ஹாசன், லைகா சுபாஸ்கரன் மற்றும் இயக்குநர் ஷங்கர் ஆகியோர் மாலை 3.45க்கு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனை  வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.