‘இந்தியன் 2’ வயதான கெட்டப்பிலுள்ள கமல் போட்டோஸ் லீக்!

 

‘இந்தியன் 2’  வயதான கெட்டப்பிலுள்ள கமல் போட்டோஸ் லீக்!

காஜல் அகர்வால் கமல் ஹாசன்  மனைவியாகி 85 வயதான அமிர்தவள்ளி  கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

‘இந்தியன் 2’படத்தில் கமல் ஹாசன் வயதான கெட்டப்பில் உள்ள புகைப்படங்கள் இணையத்தில் லீக்காகியுள்ளது. 

இந்தியன் படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் 22 வருடங்களுக்குப் பிறகு இந்தியன் 2 உருவாகி வருகிறது. ஷங்கர் இயக்கத்தில் மாபெரும் படைப்பாகத் தயாராகி வரும் இப்படத்தில் கமல் ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், விவேக் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.   இந்த படத்தை  லைகா புரொடக்‌ஷன் தயாரித்து வருகிறது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்தில் காஜல் அகர்வால் கமல் ஹாசன்  மனைவியாகி 85 வயதான அமிர்தவள்ளி  கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

kamal

முதற்கட்டமாக இப்படத்தின் படப்பிடிப்பு ஈவிபி  பிலிம் சிட்டியில் பிரமாண்டமாக செட் அமைத்து விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. பின்னர் ராஜமுந்திரி சிறைச்சாலை, சென்னை திருவல்லிக்கேணி போன்ற இடங்களில் படப்பிடிப்பு  தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும்  போபாலில் 2 ஆயிரம் துணை நடிகர்களை வைத்து பிரம்மாண்டமான சண்டைக் காட்சியை படமாக்கியுள்ளனர். இதற்கு 40 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில்  மத்தியப் பிரதேசம் மாநிலத்திலுள்ள முக்கிய நகரங்களில் ஒன்றான குவாலியரில் தற்போது இந்தியன் 2 படக்குழுவினர் முகாமிட்டுள்ளனர். மேலும் கமல் ஹாசன் வயதான கெட்டப்பில் உள்ள புகைப்படங்கள் இணையத்தில் லீக்காகியுள்ளது.