இந்தியன் 2: மாஸான போஸ்டரை வெளியிட்ட ஷங்கர்!

 

இந்தியன் 2: மாஸான போஸ்டரை வெளியிட்ட ஷங்கர்!

இந்தியன் 2 படத்தின் அடுத்த பரஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

சென்னை: இந்தியன் 2 படத்தின் அடுத்த பரஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

இந்தியன் படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் 22 வருடங்களுக்குப் பிறகு இந்தியன் 2 படம் எடுக்க முடிவு செய்தனர். அதன்படி ஷங்கர் இயக்கவுள்ள இந்த படத்தை  லைகா புரடக்‌ஷன் தயாரித்து வந்தது. இதில் முக்கிய வேடத்தில் காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

படத்தின் படப்பிடிப்பு evp பிலிம் சிட்டியில் பிரமாண்டமாக செட் அமைத்து விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஆனால் கமல் அரசியல்,  பிக் பாஸ் என்று தொடர்ச்சியாக பிஸியாகி விட்டதால் படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. தற்போது மீண்டும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளதாக அறிவிப்பு வெளியானது. 

இந்த நிலையில் இயக்குநர் ஷங்கர் சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார்.அதில் கமல்ஹாசன்,வயதான ராணுவ உடையணிந்து கம்பீரமாக நிற்பது போல், வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.