‘இந்தியன்-2’ படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் தொடக்கம்: இயக்குநர் ஷங்கர்!

 

‘இந்தியன்-2’ படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் தொடக்கம்: இயக்குநர் ஷங்கர்!

இந்தியன்-2 திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற டிசம்பர் மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: இந்தியன்-2 திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற டிசம்பர் மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் நடிகர் கமல் நடித்து வெற்றி நடைபோட்ட திரைப்படம் இந்தியன்.     1996-ஆம் ஆண்டு வெளியான அப்படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் சமீபத்தில் முடிந்ததாக கூறப்பட்டது. ஆனால், படப்படிப்பு சம்பந்தமான எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது.

kamal

இந்நிலையில், இந்தியன்-2 திரைப்படம் குறித்து சமீபத்தில் பேசிய ஷங்கர், “இந்தியன் போன்ற சாயலில் நான் ஏற்கனவே நிறைய படம் இயக்கிவிட்டேன். மற்ற சில இயக்குநர்களும் அதே சாயலில் இயக்கிவிட்டார்கள். அதனால், ‘இந்தியன் 2′-வை எப்படி இயக்க வேண்டும் என்பதை விட எப்படியெல்லாம் இயக்கக் கூடாது என்ற தெளிவைப் பெறவே மிகுந்த நாட்கள் ஆகிவிட்டன. பிறகு கதையின் ஃபைனல் காப்பியை கமல்ஹாசனிடம் சொன்னேன். நான் ரசித்து எழுதிய கதையை ஆர்வத்தோடு அவரும் கேட்டார். அதன் படப்பிடிப்பை வரும் டிசம்பரில் துவங்க இருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.