’இந்தியன் 2’ ; இயக்குநர் ஷங்கருக்கு ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து

 

’இந்தியன் 2’ ; இயக்குநர் ஷங்கருக்கு ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து

2.0 படத்தை அடுத்து ஷங்கர் இயக்கும் ’இந்தியன் 2’ படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்

சென்னை: 2.0 படத்தை அடுத்து ஷங்கர் இயக்கும் ’இந்தியன் 2’ படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஷங்கர் படங்கள் என்றால் இசை ஏ.ஆர்.ரகுமான்தான் என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருந்தபோது அதை மாற்றியிருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.

AR rahman

இருவரும் இணைந்த படத்தில் ரகுமானின் அத்தனை பாடல்களும் ஹிட் ஆனது. அதனால் இந்தியன் 2 படத்திலும் ரகுமான்தான் என்று நினைத்திருக்க, இசை அனிருத் என்று அறிவிக்கப்பட்டிருப்பது ரகுமான் ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. 

ஆனால் ஏ.ஆர்.ரகுமான் கூலாக “அடுத்த ஒரு மெஹா ப்ளாக் பஸ்டர் கிடைக்க வாழ்த்துகள்” என்று டுவிட் செய்து ஷங்கரை வாழ்த்தியிருக்கிறார்.

இதற்கு முன்பு ஷங்கர் இயக்கிய அந்நியன், நண்பன் ஆகிய இரு படங்களுக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.