இந்தியன் 2’வின் ஒரிஜினல் வில்லன் கமலா, ஷங்கரா, லைகா நிறுவனமா?…

 

இந்தியன் 2’வின் ஒரிஜினல் வில்லன் கமலா, ஷங்கரா, லைகா நிறுவனமா?…

‘இந்தியன் 2’ குறித்து பல்சுவை கொண்ட 40 வகையான வதந்திகள் நடமாடுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை படம் தடைபட்டு நிற்பதற்குக் காரணமாக லைகா நிறுவனத்தையே சுட்டிக்காட்டுகின்றன.

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்த கட்டத்துக்கு நகராமல் நொண்டியடித்துக்கொண்டிருக்கும் கமல், ஷங்கர் கூட்டணியின் ‘இந்தியன் 2’ படம் பற்றிய புதிய தகவல் ஒன்று கிடத்துள்ளது.அத்தகவலின்படி படம் தேங்கி நிற்பதற்கு முக்கிய காரணமே இயக்குநர் ஷங்கர்தான் என்று கூறப்படுகிறது.

indian 2

சுமார் 7 நாட்கள் படப்பிடிப்பு முடிந்து கிடப்பில் போடப்பட்டிருக்கும் ‘இந்தியன் 2’ குறித்து பல்சுவை கொண்ட 40 வகையான வதந்திகள் நடமாடுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை படம் தடைபட்டு நிற்பதற்குக் காரணமாக லைகா நிறுவனத்தையே சுட்டிக்காட்டுகின்றன. பல பெரும்படங்களில் பணத்தை முடக்கியுள்ள லைகா நிறுவனம் ஷங்கரை நெருக்கி மிகக் குறைந்த பட்ஜெட்டில் அப்படத்தை இயக்கித்தரச் சொல்வதாகவும் அதற்கு சம்மதிக்காத ஷங்கர் சன் பிக்சர்ஸ், மும்பையின் ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களை நாடியிருப்பதாகவும் அந்த தகவல்கள் நடமாடுகின்றன.

shankar

இந்நிலையில்  இயக்குநர் ஷங்கர் குறித்து ஒரு அதிர்ச்சி தகவலை லைகா நிறுவனத்துக்கு வேண்டியவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். அத்தகவலின்படி லைகா நிறுவனம், கமல் பிக் பாஸ் சீஸன் 3 ஐ முடித்துவிட்டு  இன்னும் சில தினங்கள் தாமதமாக வரவிருக்கும் சூழலில் படத்தின் மொத்த பட்ஜெட் எவ்வளவு ஆகும் என்று தெளிவாக ஒரு தொகை சொன்னால் படத்தை எடுத்து முடிக்கத் தயாராகவே இருப்பதாகவும் ஆனால் ஷங்கரோ, ’எனது மற்ற படங்களைப் போலவே என்னால் பட்ஜெட்டுக்கு எந்த உத்தரவாதமும் கூற முடியாது’ என்று அடம்பிடித்து வருவதாகவும் சொல்கிறார்கள்.

ஆக கமல் ரசிகர்கள், ’படத்தை எடுப்பீங்களா எடுக்கமாட்டீங்களாங்குற உண்மை தெரிஞ்சாகணும் சாமி’ என்று இன்னும் கொஞ்ச காலத்துக்கு தலையைப் பிய்த்துக்கொண்டு அலையவேண்டியதுதான்.