இந்தியன் வங்கியில் கொள்ளை முயற்சி : லாக்கரை உடைக்க முடியாததால் ஏமாந்து போன திருடர்கள் !

 

இந்தியன் வங்கியில் கொள்ளை முயற்சி : லாக்கரை உடைக்க முடியாததால் ஏமாந்து போன திருடர்கள் !

அதில் நேற்று முன் தினம் இரவு நேரத்தில் வங்கியின் பக்கவாட்டு வழியாக உள்ளே நுழைந்த திருடர்கள், வங்கி முழுவதிலும் மிளகாய்ப்பொடி தூவிவிட்டு உள்ளே சென்றுள்ளனர்.

தஞ்சாவூர் அருகே அம்மன் பேட்டையில் உள்ள இந்தியன் வங்கி செயல்பட்டு வருகிறது. அதில் நேற்று முன் தினம் இரவு நேரத்தில் வங்கியின் பக்கவாட்டு வழியாக உள்ளே நுழைந்த திருடர்கள், வங்கி முழுவதிலும் மிளகாய்ப்பொடி தூவிவிட்டு உள்ளே சென்றுள்ளனர்.

bankl

வங்கியில் சிசிடிவி கேமரா இருப்பதைக் கண்ட திருடர்கள் வங்கியின் முன் பகுதியிலிருந்த 3 சிசிடிவி கேமராவின் இணைப்புகளைத் துண்டித்துள்ளனர். அதன் பின்னர், வங்கியிலிருந்த டிராயர்களில் திறந்து பார்த்துள்ளனர். ஆனால், அங்குப் பணம் ஏதும் இல்லாததால் உள்ளே சென்று லாக்கரை திறக்க முயன்றுள்ளனர். லாக்கர் மிகவும் உறுதியாக இருந்ததால் திருடர்களால் அதனை உடைக்க முடியவில்லை. அதனால், அங்குத் திருடப் போனதே வேஸ்ட் என்று எண்ணி அங்கிருந்து தப்பித்துள்ளனர். 

bank

நேற்று காலை வங்கியின் காசாளர் ரவி வங்கியைத் திறக்க முற்பட்ட போது வங்கி முழுவதிலும் மிளகாய் பொடி தூவியிருப்பதைக் கண்ட காசாளர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். அதன் பின்னர், அங்கே மோப்ப நாயுடன் சென்ற போலீசார், வங்கியில் சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது, திருடர்கள் 3 கேமராவின் இணைப்பைத் துண்டித்திருப்பது தெரிய வந்துள்ளது. வங்கியின் உள்ளே இருந்த 3 கேமராவை கவனிக்காத திருடர்கள் அதனை விட்டுச் சென்றதால், அந்த கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் திருடர்கள் திருட வந்துள்ளதைக் கண்டுபிடித்து அந்த நபர்களைத் தேடி வருகின்றனர். இந்த கொள்ளை முயற்சியில் வங்கியின் உள்ளே இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான பணம், நகைகள் தப்பின.