இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக செய்தியாளர் சந்திப்பில் மோடி

 

இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக செய்தியாளர் சந்திப்பில் மோடி

என்னாது மோடி செய்தியாளர்களை சந்திக்கிறாரா, அய்யையோ எடுடா அந்த ஏ டி எம் கார்டை, ஓடுங்கடா பெட்ரோல் பங்குக்குண்ணு அவசரமாக கிளம்புறீங்களா, பொறுமை பொறுமை. அதெல்லாம் எந்த புது ஃபர்னிச்சரும்  உடையல.

என்னாது மோடி செய்தியாளர்களை சந்திக்கிறாரா, அய்யையோ எடுடா அந்த ஏ டி எம் கார்டை, ஓடுங்கடா பெட்ரோல் பங்குக்குண்ணு அவசரமாக கிளம்புறீங்களா, பொறுமை பொறுமை. அதெல்லாம் எந்த புது ஃபர்னிச்சரும்  உடையல. பிரதமர் மோடி பேட்டி இல்ல செய்தியாளர் சந்திப்பு அப்டின்னு செய்தி வந்துட்டதாலே ஏதோ  ஏழரை அப்டின்னு நீங்க பதறுறது புரியுது.

modi

அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி பதவியேற்றுக் கொண்ட பிரதமர் மோடி முதல் முறையா நிறைய செய்தியாளர்கள் இருக்கக்கூடிய ஒரு செய்தியாளர் சந்திப்புக்கு வந்திருக்கிறார். ஆனால் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பு அல்ல. பாஜக தலைவர் அமித் ஷா மட்டும் பங்கேற்பதற்கான செய்தியாளர் சந்திப்புதான் இது. வழக்கம் போலவே திடீர்னு நடுவுல பூந்து பக்கத்துலதான் உட்கார்ந்திருக்கிறார்  நம்ம மோதி. ‘

modi and amit shah

சரி பரவால்ல இதுநாள் வரைக்கும்தான் வரலை, இன்னைக்காவது வந்தாரே என அவரிடம் கேள்வி கேட்கப் போன செய்தியாளர்களுக்கு செம  ஷாக். அதாவது, “பாரதிய ஜனதா கட்சி ஒழுக்கமான கட்சி, இந்த செய்தியாளர் சந்திப்பு அமித் ஷா தலைமையில் நடப்பது, அதனால் அவர்தான் கேள்விக்கு பதில் சொல்லணும் அவரை மீறி நான் பதில் சொல்றது ஒழுக்கத்தை மீறுவதாக இருக்கும். அதனால் நான் எதுவும் சொல்ல மாட்டேன், ஆனா ஒண்ணே ஒண்ணு சொல்றேன் போனவாட்டியை விட அதிக தொகுதிகளில் ஜெயிப்போம் நன்றி வணக்கம்” அப்டின்னு சொல்லிட்டு பந்தை அமித் ஷா பக்கம் தள்ளி விட்டுட்டு அமைதியாகி விட்டார் மோதி. திருப்பதியில லட்டுக்குப் பதிலா ஜாங்கிரி கொடுக்கலாம்னு  சந்திரபாபு நாயுடு விட்ட ரீலை விட பெரிய ரீல் இதுதான். சரிதானே?