இந்தாண்டு பிறந்த நாளில் நனவாகிய எம்.ஜி.ஆரின் கனவு!! 

 

இந்தாண்டு பிறந்த நாளில் நனவாகிய எம்.ஜி.ஆரின் கனவு!! 

எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா நடித்த ‘வந்தியத்தேவன் : பொன்னியின் செல்வன் பாகம் 1’ அனிமேஷன் திரைப்படத்தின் பாடல் வெளியீடப்பட்டுள்ளது. 

எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா நடித்த ‘வந்தியத்தேவன் : பொன்னியின் செல்வன் பாகம் 1’ அனிமேஷன் திரைப்படத்தின் பாடல் வெளியீடப்பட்டுள்ளது. 

கல்கியின் பொன்னியின் செல்வன் கதையைத் திரைப்படமாக எடுக்கவேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் நீண்டநாள் கனவாக இருந்தது. போஸ்டர் வரை வந்து அந்தப் படம் கைவிடப்பட்ட அந்த படத்தை சனீஷ்வர் அனிமேஷன்ஸ் நிறுவனம் தற்போது  ‘வந்தியத்தேவன் : பொன்னியின் செல்வன் பாகம் 1’ என்ற பெயரில் அனிமேஷன் திரைப்படமாக தயாரித்துள்ளது. நான்கு ஆண்டுகளாக நடைபெற்ற பணி நிறைவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின் பாடல் ஒன்றை இக்குழு வெளியிட்டுள்ளது. ‘பெரியார் குத்து’ பாடல் மூலம் அனைவரின் கவனத்தைக் கவர்ந்த ரமேஷ் தமிழ்மணி இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கான வசனம் மற்றும் பாடல்களை எழுதிய பெருமை மதன் கார்க்கியை சேரும். 

Vallavaraiyan Vandiyadevan

தவச்செல்வனின் இயக்கத்தில் பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்தை இந்த ஆண்டு பல்வேறு மொழிகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். எம்.ஜி.ஆரின் தத்துவப் பாடல்கள் காலத்தை வென்றவை என்பதை நாம் அறிவோம். இத்திரைப்படத்தில், சந்தோஷ் ஜெயகரனின் குரலில், வந்தியத்தேவனின் அறிமுகப் பாடல் ‘உலகம் என் உலகம் நான் உத்தரவிட்டால் விடியும்’ என்று தொடங்கி ‘ஒவ்வொரு நொடியும் வைரம் என்றால் காலம் புதையல்தானே; ஒவ்வொரு உள்ளமும் அரியணை என்றால் நிரந்தர அரசன் நானே!’ என்று நிறைவடைகிறது.  புரட்சித்தலைவருக்காக எழுதப்பட்ட வரிகள். அனைவரின் மனதிலும் நீங்கா இடம்பிடித்த புரட்சித்தலைவரின் பிறந்தநாள் அன்று இந்தப் பாடலை வெளியிட்டு அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளது படக்குழு.