இந்தாண்டு தமிழகம் – கர்நாடகம் இடையே காவிரி நீர் பிரச்னை இருக்காது: ஏன் தெரியுமா?

 

இந்தாண்டு தமிழகம் – கர்நாடகம் இடையே காவிரி நீர் பிரச்னை இருக்காது: ஏன் தெரியுமா?

தென்மேற்கு பருவமழையானது இந்த முறை தாமதமாகப் பெய்தாலும் அணைகள் நிரப்பி வழிகின்றன.

கர்நாடகா: தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் இடையே இந்த ஆண்டு காவிரி நீர் பிரச்னை இருக்காது என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார். 

cauvery

கர்நாடகாவில் பருவமழை கொட்டி தீர்த்ததால் மண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை, கபினி அணை நிரம்பியுள்ளது. இதனால் கர்நாடகாவிலிருந்து காவிரிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. 

yeddy

இந்நிலையில் முழு கொள்ளளவை எட்டியுள்ள   கிருஷ்ணராஜசாகர் அணையில் நேற்று முதல்வர் எடியூரப்பா சிறப்புப் பூஜைகள் நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தென்மேற்கு பருவமழையானது இந்த முறை தாமதமாகப் பெய்தாலும் அணைகள் நிரப்பி வழிகின்றன. அதனால் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி  இந்த ஆண்டு தமிழகத்திற்கு, கர்நாடகாவிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் இடையே காவிரி நீர் பிரச்சினை இருக்காது.  இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்து அணைகள் நிரம்ப வேண்டும். விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் இடையே உள்ள காவிரி நீர் பிரச்னை தீர் வேண்டும் என்று ஆண்டவனை பிராத்திக்கிறேன்’ என்றார்.