இத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 18 ஆயிரத்தை கடந்தது

 

இத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 18 ஆயிரத்தை கடந்தது

இத்தாலி நாட்டில் கொரோனா தொற்றால் பலியானோர் எண்ணிக்கை ஒரேநாளில் 18 ஆயிரத்தை கடந்துள்ளது.

ரோம்: இத்தாலி நாட்டில் கொரோனா தொற்றால் பலியானோர் எண்ணிக்கை ஒரேநாளில் 18 ஆயிரத்தை கடந்துள்ளது.

கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 95 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். மொத்தம் இதுவரை 16 லட்சத்து 5 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 3 லட்சத்து 56 ஆயிரம் பேருக்கு மேல் குணமடைந்துள்ளனர். சீனாவை காட்டிலும் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. ஸ்பெயின் கொரோனா பலி எண்ணிக்கை இத்தாலியின் எண்ணிக்கைக்கு அருகில் முன்னேறி வருகிறது.

italy

இத்தாலி நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 18,279-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் அதிகம் பேர் உயிரிழந்த நாடுகளின் பட்டியலில் இத்தாலி முதல் இடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இத்தாலி நாட்டில் 610-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். இதுவரை கொரோனாவால் 143,626 பேர் அந்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 28,470 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கின்றனர்.