இத்தாலியில் ஒரே நாளில் 793 பேரை பலிக்கொண்ட கொரோனா

 

இத்தாலியில்  ஒரே நாளில் 793 பேரை பலிக்கொண்ட கொரோனா

வணிக வளாகங்கள், பூங்காக்களை  வரும் 31 ஆம் தேதி மூடவைக்கக்கோரி அரசு உத்தரவிட்டுள்ளது.  கொரோனாவிற்கு தற்போதைய நிலவரப்படி  உலகளவில் பலியானவர்களின் எண்ணிக்கை 13,025 ஆக உயர்ந்துள்ளது. 

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  உருவான  கொரோனா வைரஸ் தற்போது  173  நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  இதனால்  பல்வேறு நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன.  பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  மேலும் கோயில்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பூங்காக்களை  வரும் 31 ஆம் தேதி மூடவைக்கக்கோரி அரசு உத்தரவிட்டுள்ளது.  கொரோனாவிற்கு தற்போதைய நிலவரப்படி  உலகளவில் பலியானவர்களின் எண்ணிக்கை 13,025 ஆக உயர்ந்துள்ளது. 

ttn

சீனாவில் நேற்றைய நிலவரப்படி 3 ஆயிரத்து 255 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் இத்தாலியில்  4 ஆயிரத்து 825 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 793பேர் உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது. இங்கு கணிசமான அளவு முதியவர்களே பாதிக்கப்படுகின்றனர்.