இதோ இன்னொரு ஆறுவழி பசுமைச்சாலை தமிழ்நாட்டில்!

 

இதோ இன்னொரு ஆறுவழி பசுமைச்சாலை தமிழ்நாட்டில்!

சேலம் விவசாயிகள் போலவே திருவள்ளூர் விவசாயிகள் தூக்கமும் கெடும் நாள் தொலைவில் இல்லை. சேலம் – சென்னை எட்டுவழிச்சாலையும் சரி, சென்னை – குர்னூல் பொருளாதார விரைவு நெடுஞ்சாலையும் சரி, இந்த இரண்டு சாலைகளும் போய்ச் சேர்வது சென்னை காட்டுப்பள்ளியில் இயங்கிவரும் அதானியின் தனியார் துறைமுகத்திற்குத்தான். எல்லா சாலைகளும் ரோம் நகரை க்கி பழமொழி. எல்லா தேசிய நெடுஞ்சாலைகளும் அதானி துறைமுகத்தை நோக்கி!

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான பொற்கால ஆட்சி முடிவதற்குள் தமிழ்நாட்டில் நான்கு வழி, ஆறு வழி, எட்டு வழிச்சாலை என தமிழ்நாட்டு பரப்பளவில் பாதியை தேசிய நெடுஞ்சாலைத்துறையே எடுத்துக்கொள்ளும் போலிருக்கிறது. சென்னை – சேலம் 8 வழிச்சாலை பிரச்னை முடிந்துவிட்டது என விவசாயிகள் ஒருபக்கம் மகிழ்ந்திருந்தாலும், அதெல்லாம் கிடையாது, கோட்டை அழிச்சுட்டு முதல்லேர்ந்து வருவோம் என திரும்பவும் உச்சநீதிமன்றம் சென்றிருக்கிறது அரசு. அதேபோல், இப்போது  சென்னை – குர்னூல் பொருளாதார விரைவு நெடுஞ்சாலை திட்டத்தை கொண்டுவந்தே தீருவோம் என அடம்பிடிக்கிறது,

Chennai Salem 8 lane road

இந்த பொருளாதார விரைவுச்சாலியின் ஒருபகுதியாக, சென்னைக்கு அருகில் உள்ள  தச்சூர் முதல் ஆந்திராவின் சித்தூர் வரை 126 கிலோமீட்டர்களுக்கு ஆறு வழி பசுமைச்சாலை அமையவிருக்கிறது. இந்த 126 கிலோமீட்டர் தூரத்திற்கும் இருக்கும் 19,581 மரங்களும் வெட்டப்படும் சோகம் நிகழவிருக்கிறது. அதுமட்டுமன்றி, திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் 700 மீட்டர் அளவுக்கும் சாலை அமையவிருக்கிறது. கையகப்படுத்தப்படவுள்ள 884 ஹெக்டேர் நிலப்பரப்பில் 76% விவசாய நிலங்களாகும். சேலம் விவசாயிகள் போலவே திருவள்ளூர் விவசாயிகள் தூக்கமும் கெடும் நாள் தொலைவில் இல்லை.

Adani Port Kattupalli

சேலம் – சென்னை எட்டுவழிச்சாலையும் சரி, சென்னை – குர்னூல் பொருளாதார விரைவு நெடுஞ்சாலையும் சரி, இந்த இரண்டு சாலைகளும் போய்ச் சேர்வது சென்னை காட்டுப்பள்ளியில் இயங்கிவரும் அதானியின் தனியார் துறைமுகத்திற்குத்தான். எல்லா சாலைகளும் ரோம் நகரை க்கி பழமொழி. எல்லா தேசிய நெடுஞ்சாலைகளும் அதானி துறைமுகத்தை நோக்கி!