‘இதை விட பெரிய கார் வாங்க வேண்டும்’ – சிறுவனை தன் காரில் அமர வைத்து அன்புமணி அறிவுரை!

 

‘இதை விட பெரிய கார் வாங்க வேண்டும்’ – சிறுவனை தன் காரில் அமர வைத்து அன்புமணி அறிவுரை!

தன்னை பார்ப்பதற்காக சாலை ஓரம் நின்று கொண்டிருந்த சிறுவனை அழைத்து, தன் காரில் அமர வைத்துள்ளார் அன்புமணி ராமதாஸ்.

சென்னை: தன்னை பார்ப்பதற்காக சாலை ஓரம் நின்று கொண்டிருந்த சிறுவனை அழைத்து, தன் காரில் அமர வைத்துள்ளார் அன்புமணி ராமதாஸ்.

நெய்வேலியில் மூன்றாவது சுரங்கம் அமைக்க என்.எல்.சி. நிர்வாகம் முயற்சி செய்து வருகிறது. அதனை கண்டிக்கும் விதமாக பாமக சார்பில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நெய்வேலியில் இன்று நடைபெற்றது.

அதற்கு தலைமையேற்க அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று நெய்வேலி வருகை தந்திருந்தார். அப்போது, சாலை வழியாக அன்புமணி செல்வதை, ஓரமாக நின்றபடி சிறுவன் ஒருவன் பார்த்துக் கொண்டிருந்துள்ளான். 

அந்த சிறுவனை கவனித்த அன்புமணி ராமதாஸ், உடனடியாக தன் காரை நிறுத்தச் சொல்லி, சாலை ஓரமாக நின்ரு கொண்டிருந்த சிறுவனை அழைத்து தன் இருக்கையில் அமர வைத்துள்ளார், அப்போது, “நன்றாகப் படித்து இதை விட பெரிய கார் வாங்க வேண்டும்” என அறிவுரை வழங்கியுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.