இதை முன்னரே செய்திருக்கலாம் – ராணுவ வீரர்களுக்காக மத்திய அரசு செய்யும் நல்ல காரியம்

 

இதை முன்னரே செய்திருக்கலாம் – ராணுவ வீரர்களுக்காக மத்திய அரசு செய்யும் நல்ல காரியம்

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் பயணிக்க குண்டு துளைக்காத வாகனங்கள் வாங்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் பயணிக்க குண்டு துளைக்காத வாகனங்கள் வாங்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

புல்வாமா தாக்குதல் 

கடந்த பிப்ரவரி மாதம் 14 – ஆம் நாள் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனம் மீது குறி வைத்து தீவிரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 44 பாதுகாப்புப் படை வீரர்களின் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். 

pulwama attack

புல்லட் ப்ரூப் வாகனங்கள் 

இந்த நிகழ்வு நாடு முழுவதும் பல்வேறு சர்ச்சைகளுக்கு வழி வகுத்தது. இதனால் இதைப் போன்று மற்றொரு சம்பவம் நடந்து விடக் கூடாது என்று எண்ணிய மத்திய அரசு துணை ராணுவ வீரர்களுக்கு சாதாரண பேருந்துகளுக்கு பதிலாக கண்ணி வெடி தாக்குதல் நடந்தாலும் பாதிக்காத, துப்பாக்கி குண்டுகள் துளைக்காத புல்லட் ப்ரூப் வாகனங்களை வாங்க இருக்கிறது.

bullet proof army vehicle

இதில் புல்லட் ப்ரூப் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ள இந்த கவச வாகனங்களை டாடா நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும், புல்வாமா தாக்குதலுக்கு பிறகு துணை ராணுவ வீரர்கள் அனைவருக்கும் பணி விடுப்பு அல்லது பணி இடமாற்றங்களின் போது தனி விமானத்தில் செல்வதற்கான அனுமதி உடனடியாக வழங்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.