‘இதை நகைச்சுவையாகப் பார்க்க முடியவில்லை’: நண்பனுக்காகக் குரல் கொடுத்த கமல்ஹாசன் 

 

‘இதை நகைச்சுவையாகப் பார்க்க முடியவில்லை’: நண்பனுக்காகக் குரல் கொடுத்த கமல்ஹாசன் 

கோமாளி படத்தில் ரஜினிகாந்த்தின் அரசியல் வருகை குறித்த கருத்துக்கு கமல்ஹாசன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

‘இதை நகைச்சுவையாகப் பார்க்க முடியவில்லை’: நண்பனுக்காகக் குரல் கொடுத்த கமல்ஹாசன் 

சென்னை: கோமாளி படத்தில் ரஜினிகாந்த்தின் அரசியல் வருகை குறித்த கருத்துக்கு கமல்ஹாசன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

அடங்கு மறு படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள படம் கோமாளி. இதில் காஜல் அகர்வால் ஹீரோயின்னாக நடிக்க இயக்குநர் பிரதீப் படத்தை இயக்கியுள்ளார். 9வித கேட்பதில் நடித்துள்ள ஜெயம் ரவியின் போஸ்டர்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இந்த நிலையில் சனிக்கிழமை இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது. மிகவும் நகைச்சுவையாக வெளியான அதில் ஜெயம் ரவி, 16 ஆண்டுகள் கழித்து கோமாவில் இருந்து 2016ல் தான் கண் விழிக்கிறார். அதை அவரின்  நண்பர் யோகி பாபு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் நம்ப மறுக்கிறார். அதனால் அவரை நம்பவைக்கக் குறிப்பிட்ட சீன்னில் அந்த காலம் முதலே ரஜினி அரசியலுக்கு வருவேன் என கூறி வருவதை விமர்சனம் செய்வது போல் இருந்தது. அதை கண்ட ரஜினி ரசிகர்கள் மிகவும் ஆவேசப்பட்டு இயக்குநரை மிகவும் மோசமாக விமர்சனம் செய்தனர். 

இந்த நிலையில் இந்த சீசன் குறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாகக் கட்சியின் தொடர்பாளர் முரளி அப்பாஸ் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், ‘நம்மவர் அவர்கள் இன்று காலை கோமாளி ட்ரைலர் பார்த்தார். அதில் ரஜினி அவர்கள் அரசியலுக்கு வருவதை பற்றிய விமர்சனத்தை பார்த்தவர் உடனே தயாரிப்பாளருக்கு போன் செய்து இதை என்னால் நகைச்சுவையாகப் பார்க்க முடியவில்லை என்று கூறி வருத்தப்பட்டார். நட்பின் வெளிப்பாடா நியாயத்தின் குரலா’ என்று குறிப்பிட்டுள்ளார்.