இதை எல்லாம் பெண்கள் செய்தால் வீட்டினுள் செல்வம் நிலைக்காத!

இதை எல்லாம் பெண்கள் செய்தால் வீட்டினுள் செல்வம் நிலைக்காத!

கஷ்டப்பட்டு தான் சம்பாதிக்கிறோம். கை நிறைய பணம் வந்தாலும் வந்த வழியே திரும்பவும் அதே வேகத்தில் செலவாகி விடுகிறது என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா? வீட்டில் பெண் செய்ய வேண்டிய விஷயங்களும், செய்யக்கூடாத விஷயங்களும் இருக்கின்றன. இந்த மாதிரி எல்லாம் செய்து வந்தால், அதை எல்லாம் இனி தவிர்த்துவிட்டு பாருங்க… அதன் பிறகு செல்வம் எப்படி உங்க வீட்ல நிலையா தங்குதுன்னு!

manjal nol

மஞ்சள் நூல் கயிற்றில் மட்டுமே திருமாங்கல்யத்தை கோர்த்து அணிந்துக் கொள்ள வேண்டும். எத்தனை சவரனில் வேண்டுமானாலும் தாலி செயின் போட்டுக் கொள்ளுங்க. கூடவே மஞ்சள் கயிறும் நிச்சயம் மாங்கல்ய சரடில் இருக்க வேண்டும்.
பெண்கள் கோவிலில் அங்கப்ரதக்ஷிணம் செய்யக் கூடாது. ஏனெனில் பெண்களின் மார்பு பகுதி எப்போதும் பூமியில் படக்கூடாது. தூங்கும் போதும் பெண்கள் குப்புற படுக்கக் கூடாது என்பது இதனால் தான்.
கோவில்களில் பிரசாதமாக தரப்படும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக் கூடாது.
பெண்கள் எப்போதும் முந்தானையை தொங்க விட்டுக் கொண்டு நடக்கக் கூடாது.
கோவிலில் தெய்வத்தை வணங்கும் பொழுது பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக் கொண்டு முன் நெற்றி தரையில் படுமாறு மண்டியிட்டு வணங்க வேண்டும்.
தலைக்கு குளிக்கும் பொழுது சுமங்கலி பெண்கள் சிறிது மஞ்சளை உரைத்து முகத்தில் பூசிக் கொண்டு, அதன் பிறகு தான் குளிக்க வேண்டும்.
கோலமிடும் போது தெற்கே பார்த்து நின்று கொண்டு கோலமிடக் கூடாது.
திருமணம் ஆன பெண்கள் ஒரே ஒரு விரலில் மட்டுமே மெட்டி அணிய வேண்டும். ஒரே காலில் இரண்டு மூன்று அணிய கூடாது. அப்படி அணிந்து வந்தால் ஆரோக்கியம் மற்றும் கணவரின் வளர்ச்சி (உடல், வருமானம்) பாதிப்பு அடையும்.

pregnant women

கர்ப்பமான பெண்கள் உக்கர தேவதைகள் இருக்கும் கோவிலுக்கு போகக் கூடாது .
பெண்கள் கிழக்கு திசையை நோக்கி குங்குமத்தை இரண்டு புருவ மத்தியிலும் உச்சந்தலையிலும் இட்டுக் கொள்ள வேண்டும். திருமணம் ஆகாதவர்கள், உச்சந்தலையில் இட்டுக்கொள்ள கூடாது.
அமாவாசை, தவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக் கூடாது.