இதைச் செய்யலைன்னா குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் – மாநகராட்சி அதிரடி அறிவிப்பு!

இதைச் செய்யலைன்னா குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் – மாநகராட்சி அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் ஒவ்வொரு விஷயங்களிலுமே, அது பாதிப்பை ஏற்படுத்திய பிறகு தான் துரித கதியில் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். பேனர்  சரிந்து சென்னை பள்ளிக்கரணையில் சுபஸ்ரீ சம்பவ இடத்திலேயே பலியான பிறகு பேனர் விஷயத்தில் விழிப்புணர்வு ஏற்பட்டு எல்லா அரசியல் கட்சிகளும், சினிமா நட்சத்திரங்களும் பேனர்கள் வைப்பதற்கு தடை சொல்லி வந்தார்கள்.

rain water saving

அதைப் போலவே கடந்த இரண்டு மூன்று நாட்களாக திருச்சி மாவட்டத்திலும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் ஆங்காங்கே கன மழை  பெய்து வருகிறது. இந்நிலையில், இத்தனை தாமதமாக விழித்துக் கொண்ட திருச்சி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதன்படி, திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு குறித்து அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 10 நாட்களுக்குள் மழைநீர் சேகரிப்பு வசதியை அமைக்காவிட்டால், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.

rain water harvesting

அதிகாரிகள் தான் இத்தனை தாமதமாக அறிவிக்கிறார்கள் என்று நினைக்காமல், கடமைக்காக மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இருப்பதைப் போல் செய்யாமல், நிஜமாகவே முழு அக்கறையுடன் உங்கள் இல்லங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பைச் செயல்படுத்தினால் நமது  நிலத்தடி நீர் மட்டம் உயரும். அடுத்து வரும் சந்ததியினருக்காவது குடிநீர் பஞ்சமில்லாத வாழ்க்கையை விட்டுச் செல்லலாம்.