இது ரம்ஜான் மாசம்! மது குடிக்கக்கூடாது!! போலீசார் செய்த விபரீத செயல்

 

இது ரம்ஜான் மாசம்! மது குடிக்கக்கூடாது!! போலீசார் செய்த விபரீத செயல்

ரம்லான் மாதத்தில் மது அருந்தக்கூடாது எனக்கூறி இந்தோனேசியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் அடித்து நொறுக்கப்பட்டன

ரம்லான் மாதத்தில் மது அருந்தக்கூடாது எனக்கூறி இந்தோனேசியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் அடித்து நொறுக்கப்பட்டன.  

ஈகைத் திருநாள் என்று அழைக்கப்படும் ரமலான் பண்டிகை இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இஸ்லாமிய நாள் காட்டியின்படி ஒன்பதாவது மாதம் ரமலான் மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் சூரிய உதயமாவதிலிருந்து, சூரியன் அஸ்தமிக்கும் வரை இஸ்லாமியர்கள் எந்த உணவையும் எடுத்துக் கொள்ளாமல் ​நோன்பு இருப்பர். குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியோர்கள் மற்றும் பயணத்தில் இருப்பவர்களுக்கு நோன்பு இருப்பதில் விலக்கு உண்டு. ரமலான் மாத துவக்கத்தில் பிறை தெரிந்தது முதல் 30 நாட்கள் நோன்பு இருந்து 30வது நாள் முடிவில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். புனித ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் யாரும் புகை பிடித்தல், மது அருந்துவது போன்ற செயல்களில் ஈடுபட மாட்டார்கள். அதிலும் முக்கியமாக வளைகுடா நாடுகளில் ரம்ஜான் கொள்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

mm

இந்நிலையில் இந்தோனேசிய தலைநகர் ஜகர்த்தாவில் சுமார் 18,000 மதுப் பாட்டில்கள் ஜேசிபி இயந்திரம் கொண்டு நொறுக்கப்பட்டுள்ளன. ரமலான் நோன்பு மாதத்தில் மது அருந்தவேண்டாம் என்று காவல்துறையினர் முஸ்லிம்களுக்கு எச்சரித்துள்ளனர். சோதனை நடவடிக்கைகளில் சேகரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மதுபாட்டிகளை சாலையில் வரிசையாக வைத்து அதன் மீது ஜேசிபி வாகனத்தை ஏற்றி காவல்துறையினர் அடித்து நொறுக்கினர். இந்தோனேசியாவின் 260 மில்லியன் மக்கள்தொகையில் 90 விழுக்காட்டினர் முஸ்லிம்கள்தான் என்பது குறிப்பிடதக்கது.