இது புதுசு! சிக்கன் லபாப்தர்!

 

இது புதுசு! சிக்கன் லபாப்தர்!

இது தமிழ் நாட்டு நாக்குகளுக்கு நிச்சயம் புதிய சுவை. தேவை கொஞ்சம் பொறுமை! ஃபிரஷ் க்ரீம்,கசூரி மேத்தி என்ற இரண்டு மட்டும்தான் புது வரவுகள்,வாருங்கள் ‘ முருக் லபாப்த்தர்’ செய்வோம்.

இது தமிழ் நாட்டு நாக்குகளுக்கு நிச்சயம் புதிய சுவை. தேவை கொஞ்சம் பொறுமை! ஃபிரஷ் க்ரீம்,கசூரி மேத்தி என்ற இரண்டு மட்டும்தான் புது வரவுகள்,வாருங்கள் ‘ முருக் லபாப்த்தர்’ செய்வோம்.

தேவையான பொருட்கள்.

சிக்கன் 1 கிலோ
மஞ்சள் தூள் 1 ஸ்பூன்
மிளகாய்தூள் 3 ஸ்பூன்
சீரகத்தூள்  1 ஸ்பூன்.

தயிர் 2 கப்
உப்பு,

சிக்கனுடன் ,கொடுக்கப்பட்ட பொடிகள்,உப்பு , தயிர் கலந்து ஒருமணி நேரம் ஊறவைக்கவும்.

chicken-lababdar

அவித்து அரைக்க:

பெரிய வெங்காயம் 3
பச்சை மிளகாய் 5
பூண்டு 20 பல்
இஞ்சி 2 அங்குல துண்டு
முந்திரி 20 பருப்புகள்

வேகவைக்காமல் அரைக்க:

தக்காளி  3

வெங்காயத்தை வெட்டி,உடன் கொடுக்கப்பட்டு உள்ள பொருட்களைச் சேர்த்து 2 கப் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் வேகவைத்து இறக்கி,எல்லாவற்றையும் அள்ளி எடுத்து ஆறவைத்து அரைத்து பேஸ்டாக்கிக் கொள்ளுங்கள்.

தக்காளிகளை அப்படியே பச்சையாகத் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இறுதிக்கட்ட தேவைகள்:

எண்ணெய் 50 மில்லி
பட்டை 
கிராம்பு
ஏலக்காய்
பிரிஞ்சி இலை
மல்லித்தூள் 4 ஸ்பூன்
காஷ்மீர் மிளகாய் தூள் 3 ஸ்பூன்
கரம்மசாலா தூள் 1 ஸ்பூன்
ஃபிரஷ் கிரீம்
கசூரி மெத்தி
உப்பு

எப்படிச்செய்வது:

ஒரு வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து,அதில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பட்டை கிராம்பு சேர்த்து அதனுடன் வேகவைத்து அரைத்த வெங்காயப் பேஸ்ட்டைச் சேர்த்து வதக்குங்கள்.இரண்டு நிமிடம் கழித்து தக்காளிப் பேஸ்ட்டைச் சேர்க்கவும்.அதில் மல்லித்தூள்,காஷ்மீரி மிளகாய்தூளைப் போட்டு கலக்கி எண்ணெய் பிரிந்து வருகையில்,ஊறவைத்து இருக்கும் சிக்கனை போட்டு,தேவையான உப்பு, இரண்டு கப் நீர் சேர்த்து அடுப்பை சிம்மில் வைக்கவும்.சிக்கனை மூடிவைத்து 15 நிமிடம் வேகவிடுங்கள்.அதன் பிறகு மூடியைத் திறந்து 100 கிராம் ஃபிரஷ் கிரீம்,ஒரு கைப்பிடி கசூரி மேத்தி ( உலரவைக்கப்பட்ட வெந்தய கீரை) சேர்த்து இரண்டு முறை புரட்டிவிட்டு அடுப்பை அனைத்து விடுங்கள்.சிக்கன் லபாப்தர் ரெடி.