இது தான் சூப்பர்ஸ்டார்: விஜய் சேதுபதி ஓபன் டாக்!

 

இது தான் சூப்பர்ஸ்டார்: விஜய் சேதுபதி ஓபன் டாக்!

சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் வெளியில் பார்ப்பது போல இல்லை என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

சென்னை: சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் வெளியில் பார்ப்பது போல இல்லை என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்சேதுபதி த்ரிஷா நடிப்பில் வெளியான 96 திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றதை அடுத்து இத்திரைப்படம் குறித்த கலந்துரையாடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள கூகை திரைப்பட இயக்கத்தின் நூலகத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதியிடம் பேட்ட திரைப்படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், ‘ரஜினிகாந்த் வெளியில் பார்ப்பது போல் இல்லை. ஒவ்வொரு ஷாட்டுக்கு முன்பும் அவர் மெனக்கெடுகிறார். மிகச் சிறந்த நடிகர் அவரைப் பக்கத்திலிருந்து பார்த்து நான் உணர்ந்தேன். நான் சொல்வதை விட, படம் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. விரைவில் திரைக்கு வரும்’ என்று கூறியுள்ளார்.