“இது தான் என் வீடு, இந்த ரூம் ஜோ டிசைன் பண்ணது” நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு சென்ற அனுபவத்தை சொல்லும் பெண் இயக்குநர்!

 

“இது தான் என் வீடு, இந்த ரூம் ஜோ டிசைன் பண்ணது” நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு சென்ற அனுபவத்தை  சொல்லும் பெண் இயக்குநர்!

இதனால் உலகளவில் 2D எண்டர்டெயின்மெண்ட் சார்பில் வெளியாகி பிரபலங்களின் பாராட்டை  பெற்றது.

இயக்குநர் ஹலிதா ஷமீமின்  ‘சில்லுக்கருப்பட்டி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. நான்கு விதமான  குறுங்கதைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில்  நடிகர்கள் சமுத்திரகனி, சுனைனா,  சாரா அர்ஜுன், நிவேதிதா சதீஷ், மணிகண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  

ttn

குறிப்பாக   மனோஜ் பரமஹம்சா, அபிநந்தன் ராமானுஜன், யாமினி மூர்த்தி, விஜய் கார்த்திக் என 4  ஒளிப்பதிவாளர்கள் பணிபுரிந்துள்ள இப்படத்தை டிவைன் புரொடக்ஷன் சார்பில் வெங்கடேஷ் வேலினீனி  தயாரித்துள்ளார். இப்படத்தை பார்த்த நடிகர் சூர்யா இதன் உரிமத்தை வாங்கினார்.  இதனால் உலகளவில் 2D எண்டர்டெயின்மெண்ட் சார்பில் வெளியாகி பிரபலங்களின் பாராட்டை  பெற்றது.

ttn

இந்நிலையில் நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகா இருவரும்  சேர்ந்து  சில்லுக்கருப்பட்டி படக்குழுவை வீட்டிற்கு அழைத்து வாழ்த்து தெரிவித்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இதுகுறித்து படத்தின் இயக்குநர் ஹலிதா ஷமீம் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘இது தான் சூர்யா சார் வீடு, இது தான் சூர்யா சாரோட கார் என்று என்னிடம் பலர் சொல்லி கேட்டதுண்டு.  சூர்யா சாரே “இது தான் என் வீடு, இந்த ரூம் ஜோ டிசைன் பண்ணது, இந்த இடம் அவ்வளவு நினைவுகள தாங்கிட்டு இருக்கு” என்றெல்லாம் என்னிடம் சொன்னது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது’ என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு பதிவில், ‘என் சிலேட்டை வாங்கி very good போட்டது மட்டுமில்லாமல் எனக்கு இன்னுமொரு சிலேட்டையும் ( Apple Mac book pro) வாங்கி கொடுத்திருக்கிறார்கள். Box-ஐ இன்னும் பிரிக்கவில்லை, பிரித்தால் அவர்களுக்கான ஒரு கதை எழுதாமல் இருக்கப்போவதுமில்லை’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.