‘இது என்ன.. என்ன மாதிரியே இருக்கு’.. யானை பொம்மையை உடைத்த காட்டு யானை !

 

‘இது என்ன.. என்ன மாதிரியே இருக்கு’.. யானை பொம்மையை உடைத்த காட்டு யானை !

பூங்காவிற்குத்  தினந்தோறும் நிறைய மக்கள் வருவதால் அங்கு  பூஞ்செடிகள், யானை சறுக்கு, இளைப்பாறும் குடிகள் எனப் பல பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோவில் அருகே காடுகளில் வாழும் விலங்குகளைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வன உயிரின பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அந்த பூங்காவில் காலை முதல் மாலை வரை மக்கள் சென்று கண்டு மகிழ்கின்றனர். இந்த பூங்காவிற்குத்  தினந்தோறும் நிறைய மக்கள் வருவதால் அங்கு  பூஞ்செடிகள், யானை சறுக்கு, இளைப்பாறும் குடிகள் எனப் பல பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ttn

அதுமட்டுமில்லாமல், அங்குப் புலிகள் காப்பகத்தில் இருக்கும் விலங்குகளின் உருவ பொம்மைகளும் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகேயே புலிகள் காப்பகம் உள்ளதால், அந்த பூங்காவைச் சுற்றி கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், அந்த வேலிகளை உடைத்துக் கொண்டு நேற்று காட்டு யானை ஒன்று அந்த பூங்காவினுள் புகுந்துள்ளது.

ttn

அந்த யானை அங்கிருந்த மக்களை அச்சுறுத்தி, அங்கு வைக்கப்பட்டிருந்த யானை, மான் உள்ளிட்ட உருவ பொம்மைகளைச் சேதப்படுத்தியுள்ளது. இது குறித்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதால், அங்கு விரைந்து சென்ற வனத்துறையினர் அந்த யானையை வெடி வைத்து காட்டுக்குள் துரத்தியுள்ளனர். அந்த யானை அங்கிருந்த அனைத்து பொம்மைகளையும் சேதப் படுத்தியதால் பூங்கா பொலிவிருந்து காணப்படுவதாகப் பொதுமக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.