இது என்ன உங்க தமிழ்நாடுனு நினைச்சீங்களா… எங்க டெல்லி… வைகோவை கூப்பிட்டு எச்சரித்த மோடி..!

 

இது என்ன உங்க தமிழ்நாடுனு நினைச்சீங்களா… எங்க டெல்லி… வைகோவை கூப்பிட்டு எச்சரித்த மோடி..!

நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த உடன் தனது பரம எதிரியாக கருதப்பட்ட சுப்ரமணிய சுவாமியை சந்தித்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார். அடுத்து நடந்தது தான் இன்னும் பேரதிசயம். மோடி, வைகோவை அழைத்து சந்தித்தார். 

தமிழகத்தில் மோடியையும், பாஜகவையும் கடுமையாக சாடி வந்த வைகோ டெல்லிக்கு சென்றது பெட்டிப்பாம்பாக அடங்கி விட்டார். 

2009, 2014 ஆகிய மக்களவை தேர்தல்களில் பாஜக கூட்டணியில் இருந்தார் வைகோ. அப்போதெல்லாம் மோடியையும், பாஜகவையும் தலையில் தூக்கி வைத்து ஆடிவந்தார் வைகோ. அதன் பிறகு மெல்ல பாஜக கூட்டணியில் இருந்து விலகி திமுகவுடன் நட்பாகியதால் கடுமையாக விமர்சித்து வந்தார் மோடி. 

பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் கருப்பு பலூனை பறக்க விட்டு கோபேக் மோடி என கட்டாந்தரையில் கருப்புத் துண்டை விரித்து உட்கார்ந்து விடுவார் வைகோ. ஒருவேளை இனி எப்போதும் டெல்லிக்கு போகப்போவதில்லை என நினைத்துக் கொண்டாரோ என்னவோ..? ஆனால், இப்போது திமுக மீது சவாரி ஏரி ராஜ்ய சபா உறுப்பினராக எம்.பி.,யாகி டெல்லி சென்று விட்டார் வைகோ. வைகோ-ஸ்டாலின்

போனவர் அப்படியே பல்டியடித்து பாஜக தலைவர்களை ரவுண்டு கட்டி வழியப்போய் சந்தித்து வந்தார். நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த உடன் தனது பரம எதிரியாக கருதப்பட்ட சுப்ரமணிய சுவாமியை சந்தித்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார். அடுத்து நடந்தது தான் இன்னும் பேரதிசயம். மோடி, வைகோவை அழைத்து சந்தித்தார். 

அவரை சந்தித்தது குறித்து வைகோ பேசும்போது, ’’மோடியையும் அவரது அரசையும் மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறேன். இருந்தபோதும் அவர் என்னை அன்போடு வரவேற்றார். அப்போது நான் மிகவும் உணர்ச்சிவசப்படுவதாக மோடி கூறினார். அதைப்பற்றி நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அத்துடன் சில மிக முக்கியமான விஷயங்களையும் விவாதித்தேன். அதைப்பற்றி வெளியில் சொல்ல முடியாது’’ என அவர் தெரிவித்தார். வெளியே சொல்லமுடியாத விஷயங்கள் என வைகோ கூறியது இப்போது வெளியாகி இருக்கிறது.வைகோ

வைகோவிடம் மோடி, ‘அதிகமாக உணர்ச்சி வயப்பாடாதீர்கள். அது உங்கள் அனுபவத்திற்கும்ம் அரசியலுக்கு நல்லதல்ல. நான் தமிழகத்திற்கு வந்த போது அத்தனை எதிர்ப்பை நீங்கள் காட்டியதை விரும்பவில்லை. இப்போது நாடாளுமன்றத்திற்கு வந்து இருக்கிறீர்கள். பக்குவமாக நடந்து கொள்ளுங்கள்’ என அறிவுறுத்தி இருக்கிறார் மோடி. 

அதனை உள்வாங்கிக் கொண்டே இன்று  வைகோ பதவியேற்றுக் கொள்ளும் போது பணிவாக உறுதி மொழி எடுத்துக் கொண்டு அமர்ந்தார் வைகோ. அத்தோடு வைகோ 23 ஆண்டுகளுக்கு பிறகு மாநிலங்களவையில் முதல் கேள்வியை எழுப்புவதற்கு முன் மோடி மேசையை தட்டி உற்சாகப்படுத்தினார். ஆக மொத்தத்தில் வைகோவை மோடி பணிய வைத்து விட்டார் என்றே டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.