இது என்ன ஆம்பூர் பிரியாணியா உளுந்தூர்பேட்டைக்கு கிடைக்க..? அமைச்சர் கனவை பணாலாக்கிய எடப்பாடி..!

 

இது என்ன ஆம்பூர் பிரியாணியா உளுந்தூர்பேட்டைக்கு கிடைக்க..? அமைச்சர் கனவை பணாலாக்கிய எடப்பாடி..!

குமரகுருவின் அமைச்சர் கனவு தற்சமயத்துக்கு கானல் நீராகிவிட்டது. மாவட்ட எல்லை வரையறையில் தொகுதி மக்களின் எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொண்டுள்ளார்.

அமைச்சர் பதவியை இழந்த பாலகிருஷ்ணா ரெட்டி மற்றும் அண்மையில் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட மணிகண்டன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டபோதே அமைச்சர் பதவிக்கு காய் நகர்த்தி வந்தார் உளுந்தூர்பேட்டை குமரகுரு.

புதிய மாவட்டமாக கள்ளக்குறிச்சி அறிவிக்கப்பட்டு, மாவட்ட எல்லை வரையறை, தற்காலிக கலெக்டர் அலுவலகம் என அனைத்து பணிகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 

அதே நேரத்தில் இதனை வைத்து அதிமுகவில் அரசியல் சதுரங்க  விளையாட்டு ஆரம்பமாகியிருக்கிறது.  விழுப்புரம் மாவட்டத்தில் ஆளும் கட்சியில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த முன்னாள் அமைச்சர் மோகனை ஓரங்கட்டி தற்போது அசைக்க முடியாத சக்தியாக உளுந்தூர்பேட்டை குமரகுரு எம்எல்ஏ  இருந்து வருகிறார்.

 kumaraguru

எடப்பாடியின் நன்மதிப்பை பெற்றுள்ளதால்,  மாவட்டத்தில் தனது அதிகாரத்தை கோலோச்சி வருகிறார். தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி கள்ளக்குறிச்சி மாவட்ட கோட்டாவின் அமைச்சராக துடிக்கிறார். ஆனால் அதற்கு ஆளுங்கட்சியிலேயே முன்னாள், இன்னாள் எம்எல்ஏக்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இதனால் குமரகுருவின் அமைச்சர் கனவு தற்சமயத்துக்கு கானல் நீராகிவிட்டது. மாவட்ட எல்லை வரையறையில் தொகுதி  மக்களின் எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொண்டுள்ளார். அதனால் அமைச்சர் பதவி கிடைக்காத நிலையில் எதிர் அரசியல் செய்வது எப்படி என நொந்து நெருக்கமானவர்களிடம் புலம்பி வருகிறார்.