இது என்னடா சேரன் படத்திற்கு வந்த கொடுமை? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

 

இது என்னடா சேரன் படத்திற்கு வந்த கொடுமை? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நடிகர் சேரன் நடிப்பில் உருவாகியுள்ள ராஜாவுக்கு செக் படத்தின் சென்சார் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை: நடிகர் சேரன் நடிப்பில் உருவாகியுள்ள ராஜாவுக்கு செக் படத்தின் சென்சார் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் சேரன் இயக்கத்தில் வெளியான படம் திருமணம். அதைத்தொடர்ந்து இவரது இயக்கத்தில் ராஜாவுக்கு செக் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. எமோஷனல் திரில்லராக உருவாகியுள்ள இதில் இது வரை யாரும் பார்த்திராத சேரனை கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் என படக்குழு தெரிவித்துள்ளது. 

rajavuku check

இந்த நிலையில் இப்படத்தின் சென்சார் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, ‘ராஜாவுக்கு செக்.. சென்சார் முடிந்து UA சான்றிதழ் கிடைத்துள்ளது.. இயக்குநர் ராஜ்குமார் என்னிடம் இதை தெரிவிக்கும்போது உங்க படங்கள் எல்லாமே U சான்றிதழ்தான்… முதல் முறையா நாங்க அந்த ரெக்கார்ட உடைச்சுருக்கோம்னு சொன்னார்..  நான் பரவாயில்ல.. நீங்க ட்ரெண்ட்ல இருக்கிங்கன்னு சொன்னேன்’ என்று பதிவிட்டுள்ளார். 

சேரன் நடித்த அனைத்துமே படமுமே U சான்றிதழ் பெற்றியிருந்த நிலையில்,தற்போது  முதல் முறையாக அவரின் படம் UA பெற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.