‘ இது என்னடா ஏழுமலையானுக்கு வந்த சோதனை’ : கொரோனாவால் 128 ஆண்டுக்கு பிறகு வெறிச்சோடிய திருப்பதி கோயில்!

 

‘ இது என்னடா ஏழுமலையானுக்கு வந்த சோதனை’ : கொரோனாவால் 128 ஆண்டுக்கு பிறகு வெறிச்சோடிய திருப்பதி கோயில்!

கூட்டத்தால் நிரம்பி வழியும் திருப்பதி தற்போது கொரோனாவால் வரலாறு காணாத தனிமையை சந்தித்துள்ளது. 

 இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  236 ஆக உயர்ந்துள்ளது.  கர்நாடகா,டெல்லி, மகாராஷ்டிரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் உயிரிழந்த நிலையில்  ராஜஸ்தான் மாநிலத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் உயிரிழந்தார். இதன் காரணமாக தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கோயில்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பூங்காக்களை  வரும் 31 ஆம் தேதி மூடவைக்கக்கோரி அரசு உத்தரவிட்டுள்ளது.  சீரியல், சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

ttn

இந்நிலையில் கூட்டம் நிரம்பி வழியும் திருப்பதியில்  கொரோனா அச்சம் காரணமாக திருப்பதி மலைக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

ttn

இதனால் எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும் திருப்பதி மலை ஒரே ஒரு பக்தர் கூட இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. 

ttn

பொதுவாகவே அலிபிரி, மலைப்பாதை, திருமலை பஸ் நிலையம்,அன்னதான மையம், முடிகாணிக்கை செலுத்தும் இடம் என 24 மணிநேரமும் கூட்டத்தால் நிரம்பி வழியும் திருப்பதி தற்போது கொரோனாவால் வரலாறு காணாத தனிமையை சந்தித்துள்ளது. 

ttn

கடந்த 1892-ம் ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை 2 நாட்கள் அடைக்கப்பட்ட என்று கூறப்படும் நிலையில் தற்போது 128 ஆண்டுக்கு பிறகு  திருமலை கோயில் வெறிச்சோடி காணப்படுவது குறிப்பிடத்தக்கது. 

 

ttn

பக்தர்கள்  வருகை இல்லாததால் திருப்பதி மலையில் உள்ள தங்கும் அறைகள்,  மற்ற இடங்கள் என  அனைத்தையும் சுத்தம் செய்யும் பணி தீவிரமாக  நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.