இது அட்டகாசப் புலி, இது அட்ராக்ட் பண்ற புலி என டி.ஆர் பாணியில் மோடியைப் புகழ்ந்த அதிமுக அமைச்சர் 

 

இது அட்டகாசப் புலி, இது அட்ராக்ட் பண்ற புலி என டி.ஆர் பாணியில் மோடியைப் புகழ்ந்த அதிமுக அமைச்சர் 

இந்தியாவிற்கு பிரச்சனை என்றால் மோடி ஸ்டண்ட் மாஸ்டராக மாறி நாட்டை காப்பாற்றுவார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். 

இந்தியாவிற்கு பிரச்சனை என்றால் மோடி ஸ்டண்ட் மாஸ்டராக மாறி நாட்டை காப்பாற்றுவார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். 

மோடியைப் புகழும் அமைச்சர்கள் 

விஜய் நடித்த புலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது, நடிகர் விஜயை புகழ்வதற்காக டி.ராஜேந்தர், இது அருமையான புலி, இது அட்டகாச புலி, இது அட்ராக்ட் பண்ற புலி என்று வசனங்களை அடுக்கினார். அவரது அந்த பேச்சு அப்போது பயங்கர வைரல் ஆனது. அதே பாணியைத் தான் தற்போது பிரதமர் மோடியைப் புகழ்வதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

அதிமுக

அதிமுக அமைச்சர்கள் சிலர் எப்பொழுதும் மோடியையும் பிஜேபியையும் ஓவராக புகழ்வர். அந்த லிஸ்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜு ஆகியோர் மோடிக்கே புல்லரிக்கும் படி பயங்கரமாக புகழ்வார்கள்.

மோடி ஒரு மல்யுத்த வீரர் 

சமீபத்தில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அம்மா ஜெயலலிதா இல்லாத எங்களுக்கு பிரதமர் மோடி தான் தற்போது ‘டாடி’யாக இருந்து வழிநடத்துகிறார் என கூறி பரபரப்பைக் கிளப்பினார். இதையடுத்து தற்போது நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள அவர் இந்தியாவிற்கு பிரச்சனை என்றால் மோடி ஸ்டண்ட் மாஸ்டராக மாறி நாட்டை காப்பாற்றுவார், அவர் ஒரு மல்யுத்த வீரர், மோடி ஒரு கதாநாயகன் என ஏகபோகமாக பாராட்டியுள்ளார்.

மோடி

இது நெட்டிசன்கள் மத்தியில் தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க 

திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த முடியாது; உச்ச நீதிமன்றம் அதிரடி!

‘ஓட்டு போட்டா போடுங்க போடாட்டி போங்க’: தம்பிதுரையின் அடாவடி பேச்சு; வெற்றி வாய்ப்பை பாதிக்குமா?